தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அப்பாவுக்கு நடந்த மாதிரி ஆகிவிடும்'.. தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி - LOK SABHA ELECTION RESULTs 2024

Postal ballots: தேர்தல் முடிவுகளை மாற்றும் குளறுபடிகள் நடைபெறாமல் இருக்க தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

RS Bharathi
ஆர்.எஸ்.பாரதி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 4:59 PM IST

சென்னை: இந்தியாவில் 18வது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்தது. நாளை (ஜூன் 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், நேற்று இந்தியா கூட்டணியைச் சார்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை வழங்கினர். அதில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அவற்றின் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதேபோல, தமிழக தலைமை செயலகத்திலும் திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடிக்க வேண்டி வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தது தொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிக்க வேண்டி வலியுறுத்தி தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம். அதன்படி முன்பிருந்தது போல தபால் வாக்குகளை ஈவிஎம் மிஷின் வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாக தபால் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவித்து விட்டு பிறகு ஈவிஎம் மிஷினில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தபால் வாக்குகளை கடைசியாக எண்ணுவதால் குளறுபடிகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது எனவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அதை தபால் வாக்குகள் மூலம் எளிதாக அந்த வெற்றியை மாற்றி விட வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆர்.எஸ். பாரதி, தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடிவுகளை அறிவிக்க வலியுறுத்தி மனு அளித்திருந்தோம். குறிப்பாக 2016 ஆம் ஆண்டு தாராபுரத்தில் தற்போதய சபாநாயகர் அப்பாவு திமுக சார்பில் போட்டியிட்டு 49 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரையிடம் தோல்வியடைந்தார்.

அப்பாவு தோல்விக்கு தபால் வாக்குகளில் ஏற்பட்ட குளறுபடி தான் காரணம் என திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான தீர்ப்பு வரவில்லை, அதே போல மீண்டும் நடப்பெறக்கூடாது என்பதால் முதலில் தபால் வாக்குகளை எண்ண கோரிக்கை வைத்தோம் என ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

இதையும் படிங்க:வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் கோவை, பொள்ளாச்சி தொகுதிகள்!

ABOUT THE AUTHOR

...view details