திண்டுக்கல்:தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவையொட்டி 'எல்லோருக்கும் எல்லாம்’ எனும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வேடசந்தூரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நெல்லிக்குப்பம் புகழேந்தி மற்றும் வேடசந்தூர் தேர்தல் பொறுப்பாளர் நாச்சிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் நாச்சிமுத்து பேசுகையில், "திமுகவில், ஒரு கிளைக் கழகச் செயலாளருக்கு இருக்கிற அருகதை எந்த கட்சியிலும் கிடையாது. ஒரு கிளைக் கழகச் செயலாளர் இரு வண்ணக் கொடியுடன் உள்ள வேஷ்டியை அணிந்து சென்றால் மாவட்ட ஆட்சியரே எழுந்து நிற்பார்" என்று கூறினார்.
பின்னர், பொதுக்கூட்டத்தில் நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசுகையில், "நான் தற்போது வாரிய தலைவராக இருக்கிறேன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். கீழே இருந்து பார்க்கும் உங்களுக்கு நாங்கள் பேரூராட்சித் தலைவர்கள், எம்எல்ஏவாக இருக்கிறார்கள் என்று தோன்றும். ஆனால், வேட்பாளரை அறிவித்துவிட்டால் அவரை விட பாவம் எவரும் இல்லை.