சென்னை: பத்திரிகையாளரும், 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனருமான முகமது சுபைர் மீது, தேச இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக உத்தர பிரதேச காவல்துறையில் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிராக திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உ.பி.யில் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி அறக்கட்டளையின் பொதுச் செயலாளரான உதிதா தியாகி, நரசிங்கானந்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் முகமது சுபைர் பேசுவதாக அவரது பழைய வீடியோவை வெளியிட்டு குற்றஞ்சாட்டியிருந்தார்.
மேலும், அந்த புகாரின் பேரில் காசியாபாத் போலீசார் கடந்த மாதம் முகமது சுபைர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், எப்ஐஆரில் தேச இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதான கடுமையான பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளரும், 'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனருமான முகமது சுபைர் மீது தேச இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிப்பதாக உத்தர பிரதேச காவல்துறையில் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிராக திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.