தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மன்னிப்பு கேட்கனும் இல்லைன்னா ரூ.1 கோடி தரனும்" - பாமகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக எம்.எல்.ஏக்கள்! - kallakurichi illicit liquor issue - KALLAKURICHI ILLICIT LIQUOR ISSUE

DMK vs PMK on kallakurichi illicit liquor issue: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தற்காக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தவறினால் ரூ.1 கோடி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் எனவும் திமுக எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ், திமுக எம்.எல்.ஏக்கள்
அன்புமணி ராமதாஸ், திமுக எம்.எல்.ஏக்கள் (CREDIT - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 7:55 AM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ள தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில், கள்ளச்சாராய மரணம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாக, சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சார்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு அவரது வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அந்த நோட்டீஸில், "ஜூன் 19 மற்றும் 20ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இடமாற்றமும், காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமாகவும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வங்கியில் வைப்பீடு செய்யவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"கள்ளக்குறிச்சி விவாகாரத்தில் குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலகத் தயார்" - பாமகவுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் சவால்! - DMK MLA ALLEGES PMK

ஆனால், பாமக நிறுவனர் மற்றும் தலைவர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை கட்டுப்படுத்தியதாகவும், சாராயம் விற்பனை செய்ய துணை புரிந்ததாகவும், அறிவிக்கப்படாத முதலமைச்சராக செயல்படுவதாகவும், கள்ளக்குறிச்சியில் 30 ஆயிரம் பேர் கள்ளச்சாராயம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அரசியல் ஆதாயத்திற்காக ஆதாரமற்ற அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது என்றால், ஏன் இதுவரை புகார் அளிக்கவில்லை. அவர்களைக் காப்பாற்ற முயல்வது குற்றம் எனத் தெரியாதா? விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியாக நேரில் ஆஜராகி கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களின் பெயர் மற்றும் விவரங்களை அளிக்கலாம். அதனால், உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்ட இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளிக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய மரணம்; சிபிஐ விசாரணை வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்! - Kallakurichi hooch tragedy

ABOUT THE AUTHOR

...view details