தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“திமுக-பாஜக இடையில் தேவையில்லாத முடிச்சு போட வேண்டாம்”- அமைச்சர் சக்கரபாணி

தமிழ்நாட்டின் தேவைகளுக்காக திட்டங்களையும் நிதியும் ஒதுக்க கோரி முதலமைச்சர் பிரதரை பார்க்க சென்றாரே தவிர திமுகவிற்கும் பாஜகவிற்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

அமைச்சர் சக்கரபாணி
அமைச்சர் சக்கரபாணி (Credits- ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் உலுப்பகுடி பகுதிகளில் இன்று ஒருங்கிணைந்த சுகாதார வளாகம், கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், பகுதிநேர நியாய விலை கடைகள் திறப்பு மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களை அமைச்சர் சக்கரபாணி சந்தித்தார். அப்போது திமுகவும் பாஜகவும் ஒன்றாகத்தான் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,“பிரதமர் மோடி பதவி ஏற்கும் விழாவிற்கு முதலமைச்சர் செல்லவில்லை.

அமைச்சர் சக்கரபாணி பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? ஈபிஎஸ்ஸுக்கு துரைமுருகன் கேள்வி!

அவர் பிரதமரை பார்த்து தமிழ்நாட்டின் தேவைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கான போதிய நிதியை ஒதுக்க கோரிக்கை வைக்க சென்றார். இதை தவிர திமுகவிற்கும் பாஜகவிற்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையில் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்றார்.

இதையடுத்து ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் அமைச்சர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். தற்போது கலந்து கொள்கின்றனர் என செய்தியாளர் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அமைச்சர் “ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் இதற்கு முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கலந்து கொண்டார். தற்போது உயர்வு கல்வித் துறை அமைச்சராக உள்ள கோவை செழியன் கலந்து கொண்டுள்ளார். இதை வைத்து திமுகவும் பாஜகவுக்கும் தொடர்பு இருக்கும் என்று முடிச்சு போட வேண்டாம் என்று உணவுத்துறை அமைச்சர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details