தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவில் 6 சிட்டிங் எம்பிக்களுக்கு கல்தா.. வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்?

LS Polls Dmk Candidates: நாடாளுமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட நிலையில் அதில் 6 எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 12:55 PM IST

சென்னை:நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணியில் திமுக தலைமையில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, ஐயூஎம்எல், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான பட்டியலை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி, முன்னாள் மத்திய இணை அமைச்சரும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் உள்ளிட்ட 6 பேருக்கு திமுக தலைமை வாய்ப்பு மறுத்துள்ளது.

தருமபுரி எம்பி செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி ஆகியோருக்கு சீட் கொடுக்காததன் பின்னணியில் உட்கட்சி பூசல் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் வேளையில், 11 புதிய முகங்கள் தேர்தலில் களமிறங்குகின்றனர் அவர்கள் நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டு மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என வேட்பாளர்களை அறிவித்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் - தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்

ABOUT THE AUTHOR

...view details