தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை! என்ன காரணம்? - DMK Circle secretary murder

DMK Circle secretary assassinated: மதுரையில் நள்ளிரவில் திமுக வட்ட செயலாளர் திருமுருகன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை திமுக வட்ட செயலாளர் திருமுருகன்
மதுரை திமுக வட்ட செயலாளர் திருமுருகன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 3:40 PM IST

மதுரை:மதுரை எம்.கே புரத்தைச் சேர்ந்த திருமுருகன். அங்கு 77ஆவது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவருக்கு திமுகவில் பதவி வழங்கியது சக உறவினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு வழக்கம் போல், அவரது வீட்டு திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய மர்ம கும்பல் திருமுருகன் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

மர்ம நபர்கள் அவரது உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், திருமுருகனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? உறவினர்களா அல்லது அரசியல் முன் விரோதம் ஏதேனும் இவருக்கு உள்ளதா? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில் நள்ளிரவில் திமுக வட்ட செயலாளர் திருமுருகன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:மதுரையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை..! காவல்துறை விசாரணை..!

ABOUT THE AUTHOR

...view details