தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

DMK Candidate List 2024: இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யாருக்கெல்லாம் மீண்டும் வாய்ப்பு?

DMK Candidate List 2024: திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இதில், 10 புது முகங்களில் பெயர்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DMK Candidate List 2024 for Lok Sabha elections
DMK Candidate List 2024 for Lok Sabha elections

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 7:46 AM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் என ஒரே கட்டமாக நடக்க உள்ளது.

இதனையொட்டி, தமிழ்நாடு அரசியல் களம் விறுவிறுப்படைந்து உள்ளது. இதனிடையே, திமுக தலைமை அக்கட்சி சார்பில் 21 போட்டியிடும் 2024 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறது. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதனை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடுகிறார்.

இதனிடையே, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் 10 புது முகங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் திமுகவின் 21 வேட்பாளர்களில், திருவண்ணாமலை, பெரம்பலூர், தேனி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் தென்காசி, ஆரணி, கோவை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் புதுமுகங்கள் எனக்கூறப்படுகிறது. அதேபோல, தென்காசி தொகுதியில் (தனி) மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - டி.ஆர்.பாலு பதிலடி!

ABOUT THE AUTHOR

...view details