தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்புமனு தாக்கல்: அமைச்சர் பொன்முடி சபதம்! - Vikravandi By Election

Vikravandi By Election DMK Nomination: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று வேட்பாளர் தாக்கல் செய்தார். மேலும், ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா வெற்றி பெறுவார் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா
வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா (Image Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 3:05 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானதை அடுத்து, இத்தொகுதி காலியான தொகுதியாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் பொன்முடி பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu)

அதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர், வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலும், ஜூலை 13ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் எனவும், இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அவகாசம் என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட சுயேச்சையாக 7 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று காலை 11.10 மணியளவில் இந்தியா கூட்டணி கட்சியின் சார்பாக போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "இடைத்தேர்தலில் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அன்னியூர் சிவா இன்று வேப்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார். அவர் சுமார் 1 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என நம்புகிறோம். நானும் எம்பி ஜெகத்ரட்சகன், ரவிக்குமார் ஆகியோருடன் கடந்த 2 நாட்களாக ஒவ்வொரு ஒன்றியமாக சென்று வாக்குகளை சேகரித்துள்ளோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் மகளிருக்காக செய்துள்ள சாதனைகளுக்காகவே அதிகப்படியான வாக்குகளை பெற்றுப் வெற்றி பெறுவோம். கடந்த தேர்தலில் புகழேந்தி 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது பாஜக, பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. அப்போதே 9 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று, புகழேந்தி வெற்றி பெற்றார். தற்பொழுது 3 பேரும் எப்படி உள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியும். கண்டிப்பாக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா வெற்றி பெறுவது உறுதி" எனத் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வின்போது, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மற்றும் விழுப்புரம் எம்,பி., துரை ரவிக்குமார் மற்றும் விழுப்புரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்கு செல்லும்?

ABOUT THE AUTHOR

...view details