மயிலாடுதுறை: தமிழ்நாடு மட்டுமின்றி நாடளவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுவருகிறது நாடாளுமன்றத் தேர்தல். குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து கட்சியினரிடையே கூடுதல் கவனத்தை பெற்று வருகிறது என்றே சொல்லாம். பொதுவாக தேர்தல் நெருங்க நெருங்க எந்தக் கட்சி, எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும், ஒவ்வொரு கட்சிகளின் யூகம் என்ன, கட்சிகளின் திட்டங்கள் என தேர்தல் களம் சூடுபிடிக்கும்.
என்னதான் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் அதன் தேர்தல் வேலைகளை மும்மரமாகத் துவங்கியுள்ளது. பெரிய கட்சிகளில் இருந்து சிறிய கட்சிகள் வரை, ஒவ்வொரு கட்சிகளும் பொதுக்கூட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கில் செய்லபட்டு வரும் தமிழ்நாடு ஆளும் கட்சியான திமுக, அதன் ஒவ்வொரு மேடைகளிலும் உரைக்கச் சொல்லியும், குழுக்கள் அமைத்தும் மக்கள் மனதில் பதிவிட திட்டம்தீட்டி வருகிறது. அதேப்போல, என்னதான் அதிமுக, சட்டமன்ற தேர்தலையே முழுவீச்சாக நோக்கி பயணித்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தன் நிலையை நாட்ட அதிமுக அதன் கூட்டணி குறித்து தீவிர அலசலில் உள்ளது.
இவ்வாறு இருக்கையில், நாம் தமிழர் கட்சி மட்டும் அதன் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து அடியிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளைவிட, ஆளும் கட்சியான திமுக அதன் தேர்தல் வேலைகளை ஒருபடி முன்னெடுத்துள்ளது. சமீபத்தில் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டு சுமூகமாக நடைபெற்ற முடிந்தது.