சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளவே பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் மே மாதத்தின் இறுதிவரை ஒவ்வொரு நாள் காலை 10 மணி வரை மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் தொழிலக பாதுகாப்பு இயக்ககம் நேற்று உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்நடைமுறை மே மாதம் 2024 இறுதி வரை கடைபிடிக்கப்படவேண்டும்.
இணை இயக்குநர்கள்(BOCW) மேற்கூறிய அறிவுரைகள் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்படுவதை இணை இயக்குநர்கள் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்படுத்தப்பட்டு இருந்தது.