தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்துக” - தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்! - labors work pattern in summer - LABORS WORK PATTERN IN SUMMER

Working area facilities during summer: வெப்பம் அதிகமாக உள்ள துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 8:00 PM IST

சென்னை: தொழிலாளர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “காலையில் விரைவாக பணியைத் தொடங்கி மதிய வேளையில் தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும்.

இதனையடுத்து, மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளைத் தொடங்க வேண்டும். தொழிற்சாலைகள், கட்டடப்பணி, கல் குவாரி மற்றும் சாலை அமைத்தல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு” தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
வெப்பம் அதிகமாக உள்ள துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

தொழிற்சாலைகளில் கழிவறைகளைத் தூய்மையாக பராமரிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்கள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை துணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சொட்டு சொட்டாய் ஊறும் கிணற்றுத் தண்ணீர்.. குடங்களோடு காத்திருக்கும் வத்தல்மலை மக்கள்! - Effects Of Summer Heat

ABOUT THE AUTHOR

...view details