சென்னை: வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எந்த ஆசிரியரையும் போராட்டக்குழு சார்பாக வற்புறுத்துதல் கூடாது. அவ்வாறு வற்புறுத்துபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தொடக்கக் கல்வி இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில், 31 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் சுமார் 1 லட்சம் ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என டிட்டோஜாக் அறிவித்துள்ளது.
ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டால் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பார்கள். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து, சம வேலைக்கு சம ஊதியம், சரண்டர் விடுப்பு உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பொழுதும் தீர்வு எட்டப்படாததால் இன்று போராட்ட களத்தில் ஆசிரியர்கள் குதித்துள்ளனர்.
இந்த நிலையில். தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை எச்சரித்து அறிவிப்பு விடுத்துள்ளார். அதில், "தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (Tetojac) இன்று (செப்.10) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். எனவே, இன்று தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளிலும் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெற வேண்டும்.