சென்னை: எந்த ஆதாரமும் இன்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றிப் பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரைச் சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. அண்மையில் இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது. அந்தப் பேட்டியில், "கூவத்தூரில் எம்எல்ஏக்களை விலைபேசி ஆட்சிக்கு வந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என்றும், கூறியதோடு பிரபல நடிகையின் பெயரைக் குறிப்பிட்டு ஆபாசமான கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில், இதனைக் கண்டித்து இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தின் பதிவின் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், "வன்மையாகக் கண்டிக்கிறேன்.. எந்த ஆதாரமும் இன்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றிப் பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரைச் சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நடிகர் சங்க நிர்வாகிகளான விஷால், கார்த்தி ஆகியோரை டேக் செய்துள்ள சேரன், நடிகர் சங்கம் இதற்குத் தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2024: கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்புகள்!