தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை; கைது செய்யப்பட்ட இருவருக்கு கை, கால் முறிவு! - Vedasandur DMK leader murder case - VEDASANDUR DMK LEADER MURDER CASE

வேடசந்தூரில் திமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த இருவர் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சித்த போது கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விசாரணைக்கு திரும்பினர்.

எலும்பு முறிவுக்கு மாவுக்கட்டு போட்டு திரும்பும் கைது செய்யப்பட்ட இருவர்
எலும்பு முறிவுக்கு மாவுக்கட்டு போட்டு திரும்பும் கைது செய்யப்பட்ட இருவர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 3:50 PM IST

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசிபெரியண்ணா என்பவர், நேற்று முன்தினம் (செப்.26) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மதுமோகன் மற்றும் சரவணன் ஆகிய 2 பேர் நேற்று வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, வேடசந்தூர் காவல்துறையினர் சரணடைந்த இரண்டு பேரையும் வேடசந்தூருக்கு விசாரணைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, அவர்கள் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய, காவல்துறையினர் பெரியகவுண்டம்பட்டி அருகே உள்ள பெரியகுளம் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது, இரண்டு பேரும் காவல்துறையினரிடம் இருந்து தப்பியோட முயற்சித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:தேனியில் மூதாட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. திடுக்கிட வைத்த கொலையாளியின் வாக்குமூலம்!

இந்நிலையில், போலீசார் அவர்களைஒ பிடிக்க முயற்சித்த போது தவறி கீழே விழுந்துள்ளனர். அப்போது மதுமோகனுக்கு வலது கை எலும்பு உடைந்ததுள்ளது. சரவணனுக்கு இடது காலும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, போலீசார் அவர்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து, மாவுக்கட்டு போடப்பட்டது. இதையடுத்து, மதுமோகன் மற்றும் சரவணனிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details