தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திண்டுக்கல்-திருச்சி ரயில் பாதை பணிகள்...24ஆம் தேதி முதல் மாற்று வழியில் இயங்கும் ரயில்கள் விவரம்! - TRAINS RUNNING ON ALTERNATE ROUTES

திண்டுக்கல் திருச்சி ரயில் பாதையில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - Southern Railway X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 16 hours ago

மதுரை:திண்டுக்கல் திருச்சி ரயில் பாதையில் நடைபெற உள்ள மேம்பாட்டு பணிகள் காரணமாக அப்பகுதியில் செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மாற்று பாதை:திண்டுக்கல் - திருச்சி ரயில் பாதை பிரிவில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி செங்கோட்டையில் இருந்து ஜனவரி 24, 25, 27, 28, 30 ஆகிய நாட்களில் காலை 07.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரயில் (16848), கன்னியாகுமரியில் இருந்து ஜனவரி 25 அன்று புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹௌரா விரைவு ரயில் (12666)ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.

நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 28 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16340), குருவாயூரிலிருந்து ஜனவரி 24, 27, 29 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில் (16128), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 25 அன்று புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (16354), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 28 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16340), நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 30 அன்று புறப்பட வேண்டிய சிஎஸ்டி மும்பை விரைவு ரயில் (16352) ஆகியரயில்களும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் மானாமதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மயிலாடுதுறையிலிருந்து ஜனவரி 30 அன்று புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (16847), பனாரஸிலிருந்து ஜனவரி 26 அன்று புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321/16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

பகுதி ரத்தாகும் ரயில்கள்:சென்னை எழும்பூர் மற்றும் மதுரையிலிருந்து ஜனவரி 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை மற்றும் சென்னை எழும்பூர் தேஜாஸ் விரைவு ரயில்கள் (22671/22672) திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும். ஈரோட்டில் இருந்து ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரயில் (16845) மற்றும் செங்கோட்டையில் இருந்து ஜனவரி 25 மற்றும் 28 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு (16846) விரைவு ரயில் ஆகியவை கரூர் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும். ஓகாவில் இருந்து ஜனவரி 27 மற்றும் மதுரையில் இருந்து ஜனவரி 31 அன்று புறப்பட வேண்டிய மதுரை மற்றும் ஓகா சிறப்பு ரயில்கள் (09520/ 09519) விழுப்புரம் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

தாமதமாக புறப்படும் ரயில்:மதுரையில் இருந்து ஜனவரி 30 அன்று காலை 11.55 புறப்பட வேண்டிய பிகானிர் ரயில் (22631) மதியம் 02.00 மணிக்கு காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details