தஞ்சாவூர்: அகில பாரத இந்து மகா சபா சார்பில் இராஜராஜ சோழனின் மணிமண்டபம் கோரிக்கை குறித்த சிறப்பு மாநாடு கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரௌபதி திரைப்பட புகழ் இயக்குனர் ஜி.மோகன் கலந்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து இயக்குனர் மோகன் கூறுகையில், “தஞ்சை பல்கலைக்கழக வரலாற்று ஆய்வாளர் சுகுமாறன் அளித்த தகவலின் பேரில் தமிழக அரசு, தேனியை சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடமிருந்து மாமன்னன் இராஜராஜ சோழன் வரலாறு குறித்த ஆயிரம் ஆண்டுகள் முந்திய பழமையான ஓலைச்சுவடிகளை கைப்பற்றியது.
இராஜராஜ சோழன் ஓலைச்சுவடி:14 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது ஓலைச்சுவடி யாரிடம் உள்ளது, அதில் குறிப்பிட்டுள்ளவை என்ன என்பது தெரியவில்லை. இது குறித்து பலர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விவரங்கள் அறிய போராடி வருகின்றனர். எனவே, ஒலை சுவடியில் குறிப்பிட்டுள்ள இராஜராஜ சோழன் குறித்த முழுவிவரங்களை தமிழக அரசு வெளியிட முன்வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இயக்குநர் ஜி.மோகன் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) இதையும் படிங்க:"மகனுக்கு தான் திமுகவில் தலைவர் பதவி கிடைக்கும்" - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம்!
திருப்பதி லட்டு விவகாரம்: திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் நிருபிக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையில், நெய்க்கு பதில் பாமாயில் சேர்த்துள்ளனர் என்றும் அவை வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ரசாயண சேர்க்கை நடந்துள்ளது. இத்தகை செயலுக்கு காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். திருப்பதி வேங்கடாசலபதி கோயில் இந்தியா முழுவதும் பெரும்பான்மை இந்து மக்களால் போற்றி வழிபடக்கூடியது. இந்தியாவில் முக்கியமான 10 மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்ட புதிய தேவசம்போர்டு அமைக்க வேண்டும்.
நடிகர் விஜய்: நடிகர் விஜய் கட்சி தொடங்குவது, மாநாடு நடத்துவது அவரது உரிமை. இந்து தமிழ் மக்கள் கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வாழ்த்து கூறாமல், கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகைக்கு மட்டும் அவர் வாழ்த்து கூறுவது பாராபட்சமானது. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். வரும் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் வாழ்த்துகள் கூறுவார் என நம்புவோம். ஆனால், சினிமாவில் ஜெயிக்க வைத்த மக்களை இளிச்சவாயர்களாக பார்க்காதீர்கள்.