தருமபுரி:தருமபுரி மாவட்டத்தில் விசைத்தறி தொழிலுக்கு விதிக்கப்படும் வரியை தருமபுரி நகராட்சி ரத்து செய்ய வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுப்பட்ட நிலையில் அந்த தொகுதியின் பாமக எம்எல்ஏவான எஸ்.பி வெங்கடேஷ்வரன் நேற்று (டிசம்பர் 16) விசைத்தறி தொழில் இடங்களை பார்வையிட்டார்.
இது குறித்து முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளருக்கு மனு அளிக்கப்படும், ஒருவேலை இது குறித்து நடவடிக்கை இல்லாத பட்சத்தில் போராட்டம் நடத்துவேன் என எம்எல்ஏவான எஸ்.பி வெங்கடேஷ்வரன் உறுதியளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அன்னசாகரம் பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கூலிக்கு பாவு எடுத்து, அதில் துண்டு மற்றும் வேட்டி போன்றவை உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரி நகராட்சி தொழில் வரியாக சதுர அடிக்கு ரூ.12 விதிக்கின்றனர். அதை அவர்கள் ரத்து செய்ய வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று டிசம்பர் 16ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி வெங்கடேஸ்வரன், அன்னசாகரம் பகுதியில் உள்ள கூலிக்கு பாவெடுத்து விசைத்தறி தொழில் செய்து வரும் பொது மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்ட அறிந்தார்.
விசைத்தறி தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும் பாமக எம்எல்ஏ எஸ்.பி வெங்கடேஷ்வரன் (ETV Bharat Tamil Nadu) அவரிடம் பேசிய பொதுமக்கள் ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று உறுப்பினர்கள் சேர்ந்து மூன்று தறி மூலம் துண்டு உற்பத்தி செய்தாலும் ஒரு நாளைக்கு ரூ.450 மட்டுமே வருவாய் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டுதான் நாங்கள் குடும்பம் நடத்துகிறோம். ஆனால் நகராட்சி மூலம் சதுரடிக்கு 12 ரூபாய் தொழில் வரி விதித்துள்ளது.
இதனால், ஆறு மாதத்திற்கு தொழில் வரியாக ரூ.3000 முதல் ரூ.5000 வரை கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் தமிழக அரசு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி விசைத்தறி தொழிலை பாதுகாத்து வரும் சூழலில் நகராட்சி நிர்வாகம் இவ்வாறு தொழில் வரியை விதிப்பது தொழிலை நசுக்குவது போன்ற செயலாகும். எனவே தங்களுக்கு தொழில் வரியிலிருந்து விளக்கு பெற்று தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரி பாமக எம்எல்ஏ எஸ்.பி வெங்கடேஷ்வரன், "எளிமையான குடும்பத்தை சோ்ந்தவா்கள் இந்த தொழிலை செய்து வருகின்றனா். எந்த விதமான வேலை வாய்ப்பும் இல்லாததால் இவர்கள் விசைத்தறி தொழிலை செய்து வருகின்றனர். வேறு வேலை இருந்தால் இந்த வேலையில் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். ஏனென்றால், விசைத்தறி தொழில் மிகவும் கடினமான பணி.
பாமக எம்எல்ஏ எஸ்.பி வெங்கடேஷ்வரன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) தருமபுரி நகராட்சியில் இருந்து இவர்களுக்கு தொழில் வரி விதிப்பதாக தெரிவித்துள்ளனர். அரசு குடிசைத் தொழிலாக இருப்பதால் மின்சார வாரியத்தில் இருந்து 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறோம். அதை வைத்து இவர்கள் தொழில் நடத்தி வருகின்றனர். 300 சதுர அடி உள்ள வீட்டுக்கு 600 ரூபாய் வரி கட்டுகிறார்கள். மேலும் தற்போது அறிவுறுத்தியுள்ள தொழில் வரி விதிப்பால் அது 3,800 ரூபாய் வரும் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:"ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல நோக்கம்" - ஜி.கே.மணி பேச்சு!
தமிழக அரசு ஒரு உயர் அதிகாரி கொண்ட குழு அமைத்து, இவா்கள் படும் துயரத்தை நேரில் பார்த்து தக்க நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல் இந்த நகராட்சி விதித்த தொழில் வரியை கைவிட வேண்டும். நான் அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் நேரடியாக சந்தித்து மனு கொடுத்து, அவர்களுடைய பிரச்சினையை தீர்க்க பாடுபடுவேன்.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழக முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறேன். ஜனவரிக்கு முன்பே தொடர்ந்து நகராட்சி சார்பில் மிரட்டல் தோனியில் நோட்டீஸ் ஏதாவது வழங்கினால் விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஆதரவாக தருமபுரி சட்டமன்ற உறுப்பினரான நான் போராட்டம் செய்யவும் தயங்க மாட்டேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன். தேவைப்பட்டால் தலைமைச் செயலகம் முன்பு கூட உண்ணாவிரதம் இருப்பேன்," என்றார்.