ETV Bharat / bharat

2024ஆம் ஆண்டு ஒரு பார்வை| 3ஆவது முறையாக பிரதமர் ஆன மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல்.. பெரும் அரசியல் மாற்றங்களைக் கண்ட இந்தியா! - YEARENDER 2024

2024ஆம் ஆண்டில் 3ஆவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். இந்த ஆண்டு இந்தியாவில் பல அரசியல் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க வருமாறு குடியரசு தலைவர் அழைப்பு விடுத்த கடிதத்தை ஊடகங்களிடம் காட்டும் பிரதமர் நரேந்திர மோடி
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க வருமாறு குடியரசு தலைவர் அழைப்பு விடுத்த கடிதத்தை ஊடகங்களிடம் காட்டும் பிரதமர் நரேந்திர மோடி (Image credits-AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2024, 6:49 PM IST

ஹைதராபாத்: 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் 3ஆவது முறையாக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக மோடி பதவி ஏற்றார். இந்த தேர்தலில் எதிர்க்கட்சி எழுச்சி பெற்றிருக்கிறது.

இந்திய அரசியலில் 2024ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். உலகின் பெரிய அளவிலான 64.20 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவை, அடுத்த 5 ஆண்டுக்கு யார் ஆளப்போகிறார் என்பதை தீர்மானிக்கும் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தியது. மக்களவை தேர்தலானது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 10.5 லட்சம் வாக்கு சாவடிகளில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே சமயத்தில் பல மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டு மாநிலங்களில் ஏற்கனவே இருந்த கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தபோதிலும் கணிசமான எண்ணிக்கையை பெற்றன. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனபோதும், பாஜக எதிர்பார்த்ததை விட குறைந்த தொகுதிகளிலேயே வெற்றி பெற்றது. எனவே தேர்தலில் தோல்வியடைந்தபோதிலும், இந்த தேர்தலில் எதிர்க்கட்சி அணி வலுப்பெற்றதை காங்கிரஸ் கொண்டாடியது.

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசுக்குமி இடையே இழுபறி நிலை நீடித்தது. மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டது அரசியல் பதற்றத்தை அதிகரித்தது. சிறைக்கம்பிகளுக்கு பின் இருந்தபடி அவர் முதலமைச்சராக தொடர்ந்தார். ஏழு மாதங்கள் கழித்தே அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது கட்சியை சேர்ந்த அமைச்சர் அதிஷி முதலமைச்சராக பதவி ஏற்றார்.

அதே போல ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும் ஒடிசாவில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜூ ஜனதா தள ஆட்சி வீழ்ச்சியடைந்தது. ஆந்திர பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றார். யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெற்றது. இதே போல 2024ஆம் ஆண்டு பல அரசியல் முன்னேற்றங்கள் நேரிட்டன. இந்த ஆண்டு இந்திய அரசியலில் நேரிட்ட குறிப்பிட்டத்தக்க நிகழ்வுகளின் தகவல்களை சுருக்கமாக பார்க்கலாம்.

ஹேமந்த் சோரன் வீழ்ச்சியும், எழுச்சியும்: 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் மத்திய அரசுக்கு எதிராக குமுறினார். இந்த ஆண்டின் கடைசியில் மீண்டும் முதலமைச்சசர் ஆனார். இந்த ஆண்டின் ஜனவரி 31ஆம் தேதி நில மோசடி வழக்கு ஒன்றில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு சோரன் பதவி விலகினார். கைதுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு சோரன் எங்கு இருந்தார் என்பதை அமலாக்கத்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டதை தவிர இந்த வழக்கில் கூறப்பட்ட குற்றச்சாடடுகள் ஒன்றும் இல்லை என்று சோரன் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அவர் தமக்கு பதில் சாம்பி சோரனை முதலமைச்சராக தேர்வு செய்தார். அவர் ஐந்து மாதங்களாக முதலமைச்சராக பதவி வகித்தார். நடப்பாண்டு ஜூன் 28ஆம் தேதி ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் சாம்பி சோரன் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து ஜூலை 4ஆம் தேதி ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். இதனால் அதிருப்தி அடைந்த சாம்பி சோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து இருந்து விலகி, பாஜகவில் ஆகஸ்ட் 30ஆம் தேதி சேர்ந்தார்.

ஜார்கண்ட் மாநிலத்துக்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, மீண்டும் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் கடந்த நவம்பர் 28ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார்.

சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர்: 2024ஆம் ஆண்டை பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகவே இருந்தது. பல மாதங்களாக அவர் சிறையில் இருந்தபடியே முதலமைச்சராக தொடர்ந்தார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி அரசில் அங்கம் வகித்த அமைச்சர்கள், கட்சியின் முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அமலாக்கத்துறையினரின் வளையத்துக்குள் அரவிந்த் கெஜ்ரிவாலும் கொண்டு வரப்பட்டார்.

மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை அமலாக்கத்துறை அனுப்பிய பல சம்மன்களை ஏற்பதை அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்து வந்தார். முன் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தாம் கைது செய்யப்படுவோம் என்பது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தெரிந்தே இருந்தது. சிறையில் அடைக்கப்பட்டதைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக முயற்சி மேற்கொண்டது. எனினும் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்தபடி முதலமைச்சராக அவர் தொடர்ந்தார். கைது செய்யப்ப்டட பின்னர் ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்தபோது அவை நிராகரிக்கப்பட்டன.

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட சட்டப்போராட்டம் பல திருப்பங்களைக் கொண்டதாக இருந்தது. கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தலுக்கு பரப்புரை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இடைக்கால ஜாமீன் காலகட்டம் முடிவடைந்ததையடுத்து கடந்த ஜூன் 2ஆம் தேதி அவர் திகார் ஜெயிலில் ஆஜரானார். இதனிடையே கடந்த ஜூன் 20ஆம் தேதி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். எனினும் அமலாக்கத்துறை இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனவே ஜூன் 21ஆம் தேதி ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இதன் பிறகு ஐந்து நாட்கள் கழித்து மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ புலனாய்வு அமைப்பால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து சிபிஐ வழக்கில் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அதன்படி கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டது குறித்து அறிக்கைகள் வெளியிடக் கூடாது என்றும், முதலமைச்சராக எந்த ஒரு கோப்பிலும் கையெழுத்திடக் கூடாது என்றும் டெல்லியில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் ஜாமீனுக்கு நிபந்தனைகள் விதித்தது. இதன் பின்னர் நான்கு நாட்கள் கழித்து செப்டம்பர் 17ஆம் தேதி முதலமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் விலகினார். பொதுமக்கள் விரும்பினால் மட்டுமே மீண்டும் தாம் முதலமைச்சராக பதவி ஏற்பேன் என்று அறிவித்தார். செப்டம்பர் 21ஆம் தேதி டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி டெல்லியின் இளம் வயது பெண் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

2024 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்: நடப்பு ஆண்டில் இந்தியா 18 ஆவது பொதுத்தேர்தலை சந்தித்தது. ஒட்டு மொத்த நாட்டின் வாக்காளர்களும் புதிய மத்திய அரசை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்தனர். 96.8 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்ற போதிலும் 64.2 கோடி வாக்காளர்கள் மட்டுமே ஓட்டுப்போட்டனர். இதில் 31.2 கோடி பெண் வாக்காளர்களும் அடக்கம். இது வரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் பெண்கள் வாக்களித்தனர்.

உலகின் இரண்டாவது ஜனநாயக நாடான இந்தியாவில் 1951-52ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் 44 நாட்கள் நடைபெற்றது.ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைப் பொதுத்தேர்தல் நடைபெற்றது. ஜூன்4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாயின.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேஜகூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பதவி ஏற்றார். எனினும் இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது எதிர்பார்த்ததற்கும் குறைவாகவே இருந்தது. ஆந்திர பிரதேச மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு முக்கிய கூட்டணி கட்சிகளின் துணையுடன் கூட்டணி ஆட்சி அமைந்தது.

மொத்த மக்களவை தொகுதிகளான 543ல் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை பாஜக கொண்டிருந்தது. எனினும் 240 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை முறையே 16, 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதன் மூலம் தேஜகூட்டணி பலம் 293 ஆக உள்ளது.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேஜகூட்டணி அப்போது மொத்தம் 353 தொகுதிகளை பெற்றிருந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் இப்போதைய தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார்: தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட மூன்று நாட்கள் கழித்து ஜூன் 4ஆம் தேதியன்று தமக்கு 293 எம்பிக்களின் ஆதரவு இருக்கிறது என குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு கடிதங்களை வழங்கினார். 2024 தேர்தலில் தேஜகூட்டணி வெற்றி பெற்றதையடுத்து நரேந்திர மோடி கடந்த ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். மோடியின் வாக்குறுதி என்ற பாஜகவின் தேர்தல் பரப்புரை அந்த கட்சி 240 தொகுதிகளை பெற காரணமாக அமைந்தது. பிஜேபி கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவுக்கு மிக சக்திவாய்ந்த வலிமையாக இந்த எண்ணிக்கை இருந்தது.

வாரணாசி தொகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்குப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, வாக்கு எண்ணிக்கையின் முதல் ஒரு மணி நேரம் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட பின் தங்கி இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை வகித்தார். 2019ஆம் ஆண்டு 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, இந்த தேர்தலில் 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தமது தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் அனைத்து மாநிலங்களுக்காகவும் பணியாற்றுவது என உறுதியேற்றார். அதன்படி வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா கட்டமைக்கப்படும் என்றார். இந்த காலகட்டத்தின் போது முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறினார். ஊழலை வேரோடு ஒழிப்பேன் என்றும் தெரிவித்தார். தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் தேஜ கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி: இளவரசர் என்று கேலி செய்யப்பட்டு இளம் சிறுவர் என்று நிராகரிக்கப்பட்டவர் ராகுல். தொடர் தோல்விகளுக்குப் பின்னர் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெறாவிட்டாலும், குறிப்பிடத்தக்க வெற்றியை காங்கிரஸ் பெற்றது.

கேரளமாநிலம் வயநாடு, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். வயநாடு தொகுதியில் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், ரேபரேலி தொகுதியில் 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார். ராகுல் ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து வயநாடு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ராகுலின் சகோதரி பிரியங்கா பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த நவம்பர் 28ஆம் தேதி மக்களவை எம்பியாக பதவி ஏற்றுக் கொண்டார்.

மக்களவை பொதுத்தேர்தலில் மக்கள் சார்ந்த பிரச்னைகளை நலத்திட்ட உதவிகள் குறித்து உற்சாகமான செயல் திறனுடன் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். இந்தியா உண்மையில் என்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, நாட்டின் ஒருமுனையில் இருந்து இன்னொரு முனைக்கு யாத்திரையாக சென்று மக்களை சந்தித்து பாரத் ஜடோ யாத்திரை மூலம் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து களநிலவரஙகளை ராகுல் காந்தி தெரிந்து கொண்டார் என அவரை காங்கிரஸ் கட்சி பாராட்டியது.

ராகுல் காந்தியின் 2024 பிரச்சாரம் அவரது சிறந்த பிரச்சாரம் என்பதை அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பவர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். அவர் மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகள் மற்றும் கட்சியின் நலன்புரி உத்தரவாதங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார், இது வாக்காளர்களில் ஒரு பகுதியினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று (தேவைப்படும் 55 தொகுதிகள் அல்லது 543 தொகுதிகளில் 10 சதவிகித இடங்களில் வெற்றி) மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவரை மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக காங்கிரஸ் நியமித்தது. 2004ஆம் ஆண்டு அரசியலில் காலடி எடுத்து வைத்த பிறகு அரசியல் சட்ட ரீதியிலான பதவியை இப்போதுதான் அவர் முதன் முறையாகப் பெற்றிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மத்திய அமைச்சருக்கான அந்தஸ்து அவருக்கு கிடைக்கிறது. மரபுபடியான பதவி வரிசையில் அவரது நிலை உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் வெற்றி: ஆந்திரபிரதேச மாநிலத்தில் 2024ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம் தலைமையிலான தேஜகூட்டணியிடம் ஆட்சியை இழந்தது. ஒரே கட்டமாக கடந்த மே 13ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டன. 2019ஆம் ஆண்டு 151 தொகுதிகளில் வென்றிருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்து வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் 23 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த தெலுங்குதேசம், இந்த தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தெலுங்குதேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராக ஜூன் 12ஆம் தேதி பதவி ஏற்றார். கடைசியாக அவர் 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக 1995-99, 1999-2004 ஆகிய இரண்டு காலகட்டங்களில் இருந்திருக்கிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான அதிருப்தி அலை இருந்ததாலும், எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டதாலும் அந்த கட்சி தோற்றுப் போனது. ரெட்டி தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.2.60 லட்சம் கோடியை மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கி இருந்தது. எனினும் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.

ஒடிசாவில் பாஜக வெற்றி: 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 24 ஆண்டுகால பிஜு ஜனதா தளம் ஆட்சிக்கு முடிவு கட்டிய வாக்காளர்கள், பாஜக வெற்றிக்கு வாக்களித்தனர். ஒடிசாவில் ஒரு முக்கிய அரசியல் மைல்கல் எட்டப்பட்டது. நவீன் பட்நாயக் கட்சி 54 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 113 தொகுதிகளை அந்த கட்சி பெற்றிருந்தது.

அதே நேரத்தில் 147 தொகுதிகள் கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று எளிதாக பெரும்பான்மை பெற்றது. மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்பட்ட ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெற்றது. இறுதி கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடந்தது. அதே போல ஒடிசாவில் 21 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பொதுதேர்தலில் வலுவான வெற்றியை பாஜக பெற்றது.

பிஜேடி கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் ஹிஞ்சிலி மற்றும் காந்தபாஞ்சி.ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஹிஞ்சிலி தொகுதியில் வெறும் 4636 வாக்குகள் வித்தியாசத்தில் நவீன் பட்நாயக் வெற்றி பெற்றார். ஒடிசாவில் பாஜக மிகத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார். புவனேஸ்வர், பூரி நகரங்களில் இரண்டு ரோடு ஷோக்களிலும் அவர் பங்கேற்றார். பிஜூ பட்நாயக், அவரது ஆதரவாளர் விகே. பாண்டியன் ஆகிய இருவர் மட்டுமே பிஜேடி பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில் பாஜக தீவிரமான பிரச்சாரம் மேற்கொண்டது.

2024 திரிபுரா அமைதி ஒப்பந்தம்: மத்திய அரசு, திரிபுரா அரசு, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (NLFT) மற்றும் அனைத்து திரிபுரா புலி படை (ATTF) ஆகியவற்றுக்கு இடையே கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் 35 ஆண்டு கால கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (NLFT) மற்றும் அனைத்து திரிபுரா புலி படை (ATTF) அமைப்புகளின் தலைவர்கள், திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் டெல்லி நார்த் பிளாக்கில் ஒப்பந்தம் கையெழுத்தானது. திரிபுராவின் பழங்குடியினரின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மாநில அரசு நான்கு ஆண்டுகளுக்கு திட்டங்களை செயல்படுத்துவதற்கு உதவியாக ரூ.250 கோடி திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

"திரிபுரா மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கத்தை கொண்டு வர பழங்குடியினத்தை சேர்ந்த ஆயுதம் ஏந்திய பழங்குடியின குழுக்களுடன் மத்திய அரசு, திரிபுரா மாநில அரசு ஆகியவை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டது,"என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய குழுக்கள் அல்லது இதர கிளர்ச்சியாளர்களுக்கு பாதுகாப்பு அல்லது வேறு எந்த முறையிலும் பயிற்சி, ஆயுதம் வழங்குதல், போன்ற எந்தொரு செயலிலும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (NLFT) மற்றும் அனைத்து திரிபுரா புலி படை (ATTF) ஈடுபடக் கூடாதுக் கூடாது என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநில அரசு என்பது மத்திய அரசினால் கட்டுப்படுத்தப்படும் யூனியன் பிரதேசமாக 2019ஆம் ஆண்டு மாற்றப்பட்டதை அடுத்து 2024ஆம் ஆண்டு முதன்முறையாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது.

நீண்டகாலமாக தேர்தல் நடத்தப்படாத நிலையில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 1 வரை மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடந்தது. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

தேசிய மாநாடு கட்சி தலைமையில் எதிர்கட்சி கூட்டணி ஜம்மு காஷ்மீரில் போட்டியிட்டு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 49 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 41 தொகுதிகளைப் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பாஜக 29 தொகுதிகள், காங்கிரஸ் 6 தொகுதிகள், மெகபூபா முப்தியின் பிடிபி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முப்தி சையதுவால் பிடிபி கட்சி 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்தது.

தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சராக கடந்த அக்டோபர் 16ஆம் தேதி பதவி ஏற்றார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ல் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையிலான நிர்வாகத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இந்த சட்டத்திருத்தத்தின் மூலம், காவல்துறை, ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர் நியமனம், இதர சட்ட அதிகாரிகள் நியமனம் ஆகியவற்றில் ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில வழக்குகளில் வழக்கு தொடர அனுமதிக்கும் அதிகாரம், ஊழலுக்கு எதிரான அமைப்பு உள்ளிட்ட விஷயங்களில் முடிவு எடு்ககவும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றி: ஒடிசாவின் வெற்றியைத் தொடர்ந்து, ஹரியானாவில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் வியக்கும் அளவுக்கு அங்கு பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்றது. இங்கு ஒரே கட்டமாக கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8ஆம் தேதி நடத்தப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என்று முன் கணிப்புகள் வெளியான நிலையில் ஹரியானாவில் பாஜக வெற்றி என்பது முக்கியமான மைல்கல் ஆக கருதப்படுகிறது. 90 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் மெஜாரிட்டிக்கான 48 தொகுதிகளை பாஜக பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

தேர்தலில் 67.90 சதவிகித வாக்குகள் பதிவாகின. பாஜக 39.94 சதவிகித வாக்குகளைப் பெற்றது. பூபேந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் 39.09 சதவிகித வாக்குகளைப் பெற்று 37 தொகுதிகளை மட்டுமே வென்றது. ஹரியானா முதலமைச்சராக இருந்த மனோகர் லார் கத்தார் கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 54 வயதான நயாப் சிங் சைனி முதலமைச்சர் ஆனார். தேர்தலுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக முதலமைச்சராக கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நயாப் சிங் சைனி பதவி ஏற்றார்.

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை சொல்லால் ஹரியானாவில் பாஜக தேர்தலை சந்தித்தது. அந்த கட்சியின் வலுவான பிரச்சாரம் வெற்றிக்கு வித்திட்டது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை உள்கட்சி பிரச்னையால், ஆட்சிக்கு எதிரான அலையை அறுவடை செய்ய முடியவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான கூட்டணியும் வெற்றியைத் தரவில்லை. கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஜனநாயக் ஜனதா கட்சி இந்த முறை தனித்துப் போட்டியிட்டது. எனினும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்திய தேசிய லோக் தளம் கட்சி வெறும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவில் மகாயுதியின் வெற்றியால் மீண்டும் முதல்வரான ஃபட்நாவிஸ்: நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கும் முக்கியமான மாநிலமான மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றது.

288 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 132 தொகுதிகளில் வென்றது. சிவசேனா, தேசிய வாத காங்கிரஸ் ஆகியவை முறையை 57, 41 தொகுதிகளை கைப்பற்றின. எதிர்கட்சி வரிசையில் மகா விகாஸ் அகாதி கூட்டணி இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் 16 , சிவசேனா(உத்தவ் தாக்ரே)-20, என்சிபி(சரத்பவார்)-10 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றின.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கு பகுதி மாநிலத்தில் போட்டியிட்ட 149 தொகுதிகளில் 132 தொகுதிகளை பாஜக வென்றது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலை இருந்தபோதிலும் தனிப்பட்ட வகையில் அதிக தொகுதிகளை பாஜக பெற்றது. பாஜக வெற்றியைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் சில தடங்கல்களுக்குப் பிறகு துணை முதலமைச்சராக இருந்த தேவேந்திர ஃபட்நாவிஸ் மூன்றாவது முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடந்த பாஜகவின் முக்கிய கூட்டத்தில் முதலமைச்சராக ஃபட்நாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் ஒரு நாள் கழித்து முதலமைச்சராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார். அவரது பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, இதர முன்னணி அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவைத் தேர்தலில் வெறும் 240 தொகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றி இருந்த நிலையில் சில பின்னடைவுகளையும் மீறி ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றிருந்த நிலையில் மகாராஷ்டிராவிலும் பாஜக வெற்றி பெற்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 30 தொகுதிகளை மகா விகாஸ் அகாதி கூட்டணி வென்றது. ஆனால், வெறும் 5 மாதங்களுக்குள் இந்த தேர்தல் முடிவுகளுக்கு எதிராக பாஜக கூட்டணி வென்றது.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம்: மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தமது மூன்றாவது ஆட்சி காலகட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்று தெரிவித்திருந்தார். அதன்படி பாஜகவின் முக்கியமான கொள்கைகளில் ஒன்றான ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா 2024ஐ டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் விவாதம் மேற்கொண்டனர். அறிமுக நிலையிலேயே இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

மக்களவையில் விவாதத்தின் மீது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்," என்று பரிந்துரைத்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவது குறித்து மக்களவையில் டிவிஷன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்புவதற்கு ஆதரவாக 269 வாக்குகள் கிடைத்தன. கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பக் கூடாது என 198 பேர் வாக்களித்திருந்தனர். இதையடுத்து இந்த மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.