திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் கண்ணபிரான். தேவேந்திரகுல எழுச்சி இயக்க தலைவராக உள்ளார். இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், 15க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தச்சநல்லூரில் இருந்து சொந்த வேலையாக திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி பகுதிக்கு அவர் தனது ஆதரவாளர்களுடன் இரண்டு கார்களில் சென்று கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது தாலுகா காவல் நிலைய எல்லையில் தாழையூத்து டி.எஸ்.பி ரகுபதி ராஜா தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கண்ணபிரான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயணித்த இரண்டு கார்களை நிறுத்தி சோதனையிட்டு உள்ளனர். அதில் ஒரு கை துப்பாக்கி, 5 அரிவாள்கள், நான்கு நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - தேனி கோர்ட் அதிரடி..!