தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஆசை என்பது வேறு எதார்த்தம் என்பது வேறு"-ஆட்சியில் பங்கு குறித்த கேள்விக்கு திருநாவுக்கரசர் கூறிய தத்துவம்! - THIRUNAVUKKARASAR

திமுக ஆட்சியில் அமைச்சரவையில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு "ஆசை என்பது வேறு எதார்த்தம் என்பது வேறு"என முன்னாள் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பதில் கூறினார்.

திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருநாவுக்கரசர்
திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருநாவுக்கரசர் (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 6:35 PM IST

திருச்சி:காந்தியடிகள் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று 100 ஆண்டு நிறைவடைந்தததையொட்டி இன்று திருச்சி மாவட்ட காங்கிரட் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருநாவுக்கரசர், மற்றும் கட்சியினர் திருச்சி மெயின்காட்கேட் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர், "விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சியில் அமைச்சரவையில் தங்களுக்கு என்று எந்த எண்ணிக்கையையும் இதுவரை அவர் குறிப்பிடவில்லை. அதேபோல் எண்ணிக்கை அடிப்படையில் நாங்கள் ஒருபோதும் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு பெரும்பான்மை இடத்தை விட மிகக் குறைவாக திமுக பெற்று இருந்தது. அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகாரம் கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தது. கலைஞரும் அதற்கு தயாராக தான் இருந்தார். ஆனால் அமைச்சரவையில் வற்புறுத்தி இடம் வேண்டும் என்று காங்கிரஸ் கேட்கவில்லை.

இதையும் படிங்க:'எனக்கும் நடந்துச்சு'.. மாணவியிடம் குமுறிய தோழி.. அண்ணா பல்கலை. வழக்கில் புதிய தகவல்..!

அதேபோல் இந்த தேர்தலிலும் இடங்கள் தொடர்பான எண்ணிக்கை எவ்வளவு வேண்டும் என்றோ, அமைச்சர் இடம் வேண்டும் என்றோ எந்த ஒரு நிபந்தனையும் காங்கிரஸ் வைக்கவில்லை. கூட்டணி கட்சியில் அமைச்சரவையில் நம்முடைய கட்சியும் இடம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டனுக்கும் ஆசையும் இருக்கும். அதை போல் தான் என்னுடைய தனிப்பட்ட ஆசையை நான் இங்கு முன் வைக்க முடியாது. எனவே ஆசை என்பது வேறு எதார்த்தம் என்பது வேறு.

அதிமுகவோ, திமுகவோ யார் ஆட்சியில் இருந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் குற்றங்கள் என்பது தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே எதிர்கட்சிகள் நிச்சயம் காவல்துறையை குற்றம் சாட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் தமிழக முதல்வரும் தயாராக இருக்கிறார். ஆனால் மத்திய அரசினுடைய பங்களிப்பு இல்லாமல் நடத்த முடியாது,"என்றார்.

ABOUT THE AUTHOR

...view details