தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடிகால் கட்டுமானப் பணியில் தொய்வு..பருவமழைக்கு தாங்குமா சென்னை? துணை மேயர் சொல்வதென்ன? - chennai corporation

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் விளக்கி கூறியுள்ளார். அதுகுறித்து இச்செய்தி கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்
சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் (Credits - ETV Bharat Tamil Nadu))

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 10:49 PM IST

சென்னை:சென்னை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியது:

துணை மேயர் மகேஷ்குமார் பேட்டி (credit - ETV Bharat Tamilnadu)

கூடுதல் மழை நீர் வடிகால்: ?"சென்னையில் 2000 கிலோ மீட்டர் அளவிற்கு தான் மழை நீர் வடிகால் இருந்தது. தற்போது கூடுதலாக 1000 கிலோமீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு, புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு எல்லாமே ஒரே நேரத்திலிருந்தது. இதன் காரணமாக தண்ணீரை, கடல் உள்வாங்காமல் தேங்கி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சியில் தண்ணீர் எங்கும் தேங்காத வண்ணம் அடிப்படை கட்டமைப்புகளையும், அதற்கான பணிகளையும் செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அசோக் நகர், கோடம்பாக்கம், மயிலாப்பூர் பகுதிகளிலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

நிரந்தர மோட்டார்:ஒரு சில பகுதிகளில் கால்வாய் அமைத்தாலும், அந்த பகுதிகளில் தண்ணீர் வழியாத சூழல் இருக்கிறது. குறிப்பாக தி.நகர், கோடம்பாக்கம், லிபர்டி தியேட்டர் அருகே இருக்க கூடிய பகுதிகள் இயற்கையாகவே தாழ்வாக அமைந்த பகுதிகளாக இருக்கின்றது. இது போன்ற பகுதிகளில் நிரந்தரமாக மோட்டார் ஒன்றை பொறுத்தி அங்கு தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 700 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் மோட்டார்களை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் தற்போது கோரப்பட்டு இருக்கிறது. விரைவில் அந்த பகுதிகளில் மோட்டார்கள் பொருத்தப்பட்டு மழைக்காலங்களில் தேய்க்கும் தண்ணீர் அகற்றப்பட உள்ளது.

குறிப்பாக மழைக்காலங்களில் வேளச்சேரி, மேடவாக்கம் போன்ற பகுதிகளில் அதிகளவு தேங்கும் தண்ணீரை வாரங்கால் ஓடை பகுதியில் தேங்காமல் தூர்வாரப்பட்டு வருகிறது. வாராங்கால் ஓடைநில் வரும் தண்ணீர் ஒக்கியம் மதகில் சேகரிக்கப்படும் என்பதால் ஒக்கியம் மதகில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான கூட்டம் சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், மா.சுப்ரமணியன், தங்கம் தென்னரசு, சேகர்பாபு, எ.வ.வேலு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் அதிகமாக தேங்கும் பகுதிகளில் மின்சார பகிர்வு பெட்டியானது தாழ்வான பகுதியில் இருப்பதால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதை கொஞ்சம் உயர அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கு மின்சாரத் துறை அமைச்சர் அதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

வடிகால் பணிகள் தொய்வு?:சென்னை மாநகராட்சி உடன் மற்ற துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள், ரயில்வே பணிகள் நடைபெற்று வருவதால் மழைநீர் வடிகால் கால்வாய்கள் பணி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்றார்.

மழை நேரங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலப்பதால் தொற்று ஏற்படுகிறது? என்ற கேள்விக்கு பதில் அளித்த துணை மேயர்" மழை வடிகால் கால்வாய்களின் ஏற்படும் அடைப்புகளைச் சரி செய்வதற்குச் சென்னை குடிநீர் வாரியம் உதவியுடன் சிறப்புக் கருவிகள் மூலமாக உடனடியாக அதன் அடைப்புகளை சரி செய்து வருகிறோம்.

பொதுமக்களும் மழை வடிகால் கால்வாயில் குப்பைகளை கொட்டாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதே போல் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் ஜெனரேட்டர் மூலமாக இயங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

அதிக மழை பொய்தாலும் பகுதி இருக்கக் கூடிய மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. முகாம்களில் தங்கும் மக்களுக்கு சுகாதாரமான உணவு, சுத்தமான குடிநீர், மருத்துவ ஏற்பாடுகள் மாநகராட்சி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிக அளவு மழை பெய்தாலும், புயல் ஏற்பட்டாலும் அது எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருக்கிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக ஸ்கேனர்; சென்னை ஐஐடியின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ABOUT THE AUTHOR

...view details