சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாதவரம் தொகுதிக்குட்பட்ட கர்லப்பாக்கம் வாக்குச்சாவடியில் பா. ரஞ்சித் வாக்களித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், தமிழ்நாடு மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும், அதற்காக தனது வாக்கினை செலுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இது மிக முக்கியமான தேர்தல் என தெரிவித்த அவர், இந்திய இறையாண்மைக்கு சவால் விட கூடிய தேர்தலாக இந்த தேர்தலை பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.