சென்னை:கடந்த 2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த் 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது.
இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது. இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது.
அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன. முன்னதாக கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.