சென்னை:ஃபெஞ்சல் புயல் மழை பாதிப்பால், அவசர கால கட்டுப்பாட்டு மையத்திற்கு 2 ஆயிரத்து 648 புகார்கள் வந்த நிலையில், அவற்றில் 2 ஆயிரத்து 624 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நேற்று மாலை புதுச்சேரி காரைக்கால் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதனால், ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேற்று இரவு (நவ.30) சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆய்வு (ETV Bharat Tamil Nadu) ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் அந்தித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது, “ஃபெஞ்சல் புயல் கரையை கடந்து வருவதால் தற்போது சென்னையில் மழை அளவு சற்று குறைந்துள்ளது.
மழை காரணமாக சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் உள்ள 21 சுரங்க பாதையில் 7 சுரங்கப்பாதைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ல 7 சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளது.
மழைநீரால் மூழ்கியுள்ள சுரங்கப்பாதை (ETV Bharat Tamil Nadu) மழை புகார்: அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு இதுவரை 2,648 புகார்கள் வந்துள்ளன. இதில், 2,624 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 904 மோட்டார் பம்புகள் சென்னையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 18 பேரிட மீட்பு குழுக்கள் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் 18 ஆயிரத்து 500 பேர் களப்பணியில் உள்ளனர்.
இதையும் படிங்க:வேளச்சேரியில் மின்கம்பியை மிதித்து உயிரிழந்த சக்திவேல் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி - முதல்வர் அறிவிப்பு!
கடந்த புயலுக்கும், தற்போது வந்திருக்கக்கூடிய புயலுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த புயல் நாம் எதிர்பார்த்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்கவில்லை.
மழையில் தத்தளித்த பொதுமக்கள் (ETV Bharat Tamil Nadu) சென்னையில் 143 நிவாரண மையங்களில் 4,904 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 3 லட்சத்து 230 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயலால் பெரிய பாதிப்பு இருக்காது. அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை அரசாங்கம் சமாளிக்கும். மழை நேரங்களில் மின்சார வாரியம் தொடர்ந்து முறையாக பணியாற்றி வருகிறது.
சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை. தொடர்ந்து, மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்காதவாறு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக இயற்கை மீறி எதுவும் செய்ய முடியாது. வானிலை ஆய்வு மைய இயக்குனர் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று இரவு சென்னையில் இருந்து 120 கி.மீ. மற்றும் புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்துள்ளது.
இதையும் படிங்க:கரையைக் கடந்த ஃபெஞ்சல்; இயல்பு வாழ்க்கைக்கு வேகமாகத் திரும்பும் சென்னை!