சென்னை: சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் இந்தியில் பேசி பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மிரட்டல் வந்த தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர். இது குறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரட்டல் விடுத்து அழைப்பு எந்த பகுதியில் இருந்து வந்துள்ளது?, எந்த சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது? என்பதை கண்டறியும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தேடப்படும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக காவல் கட்டுப்பாட்டு எண்களை தேசிய புலனாய்வு முகமை அறிவித்திருந்த நிலையில் அந்த எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடிக்கு இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"நான் மனித பிறவியே இல்லை; கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பரபரப்பு கருத்து!