தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆபாச வீடியோ அனுப்பி கைதான மகன்.. பிரபல யூடியூபர்கள் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தரிடம் போலீஸ் விசாரணை! - rowdy baby surya issue - ROWDY BABY SURYA ISSUE

புதுச்சேரியில் சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பிய பிரபல யூடியூபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், யூடியூபர் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தரை நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சைபர் க்ரைம் விசாரணை
சைபர் க்ரைம் விசாரணை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 1:22 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்துள்ளார். இதனிடையே, அந்த சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத புதிய நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. நாளைடைவில் இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களைப் பரிமாறுவது மூலம் நட்பாக பழகி உள்ளனர்.

மேலும், அவர்கள் பழகிய 15 நாட்களுக்குள் அந்த நபர் திடீரென சிறுமிக்கு பல்வேறு ஆபாச வீடியோக்கள் மற்றும் அந்த சிறுமியின் ஆபாச வீடியோவையும் அனுப்பி வைத்து மிரட்டத் தொடங்கியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த அந்த சிறுமி, இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரது தாய் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க:பல்லவன் விரைவு ரயிலில் தீ விபத்து.. பயணிகள் பதறியடித்து ஓடும் காட்சி வைரல்!

இதனை அடுத்து, இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது, மதுரையைச் சேர்ந்த யூடியூபர் சிக்கந்தர்-சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24) என்பதும், ரவுடி பேபி என்று அழைக்கப்படும் சூர்யா அவருடைய சித்தி என்பதும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, மதுரை விரைந்த தனிப்படையினர் அஷ்ரப் அலியை கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஷா, சுமி ஆகியோரையும் விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், புகார் கொடுத்ததால் சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதைத் தொடர்ந்து ரவுடி பேபி சூர்யா, அவரது சகோதரி சுமி - கணவர் சிக்கந்தர் ஷா ஆகியோரை சைபர் க்ரைம் போலீசார் இன்று அழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details