சென்னை:தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி, பிஓடி, பிபிடி, பிபார்ம், பிஏஎஸ்எல்பி, ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு மே 23ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதில், பார்ம் டி பட்டப்பில் சேர்வதற்கு 3 ஆயிரத்து 500 பேரும், மற்ற மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு 68 ஆயிரத்து 108 பேர் என 71 ஆயிரத்து 108 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது, இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவின் செயலாளர் அருணலதா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்த நிலையில் இது குறித்து, மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநரும், மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலாளருமான அருணலதா கூறுகையில், "இன்று வரையில், கவுன்சிலிங் கமிட்டியிலிருந்து, எம்பிபிஎஸ்(MBBS), பிடிஎஸ்(BDS) படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. அவை, தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அறிவிக்கப்படும்.
நீட் தேர்வு வழக்குகள்: ஜூலை 8 ஆம் தேதி வரையில், நீட் தேர்வு (NEET) குறித்து உச்ச நீதிமன்றத்தில் 100 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகள் முடிவடைந்தப் பின்னர், தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அளிக்கும் வழிகாட்டுல் அடிப்படையில், தமிழ்நாட்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும்.
தரவரிசைப் பட்டியல்: பாராமெடிக்கல்பட்டப்படிப்புகளான, பார்ம் டி (Doctor of Pharmacy) படிப்பில் சேர 3 ஆயிரத்து 500 விண்ணப்பம், பிற படிப்புகளில் சேர்வதற்கு 68 ஆயிரத்து 108 விண்ணப்பம் என 71 ஆயிரத்து 108 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தற்போது, கவுன்சிலிங் கமிட்டி இந்த விண்ணப்பங்களை ஆய்வுச் செய்து வருகிறது. இதனையடுத்து, இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் (merit list) தயார் செய்யப்படும்.
மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டும் என்பதே முதன்மையான ஆசையாகவும், குறிக்கோளாகவும் இருக்கும். எனவே, மாணவர்களுக்கு முதலில் எம்பிபிஎஸ்க்கான மாணவர் சேர்க்கை முடித்தப்பின்னர், பிற படிப்பிற்கான மாணவர் சேர்க்கை துவக்கப்படும். எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. மாணவர்களுக்கான இடங்களை அதிகரித்தும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் எந்த அறிவிப்பும் அளிக்கவில்லை.
மருத்துவ இடங்கள்:அரசு மருத்துவக் கல்லூரியில்(Government Medical College) 5 ஆயிரத்து 50 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரியில்(Private Medical College) 3 ஆயிரத்து 400 இடங்களும், கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் (ESIC Hospital) 150 இடங்களும் உள்ளது. நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில்(deemed university) உள்ள இடங்களை அகில இந்திய அளவில், தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு நடத்தும்.
மாநில தனியார் பல்கலைக்கழகம்(State Private University) 3 உள்ளது. அதில் ஒரு பல்கலைக்கழகம் நீதிமன்றம் சென்றுள்ளது. அதனால், 150 இடங்கள் குறையுமா? என்று தெரியவில்லை. நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றால் அந்த இடங்களும் சேர்க்கப்படும். தமிழ்நாட்டில் 11 ஆயிரத்து 500 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ளது.
பிடிஎஸ் (BDS) படிப்பிற்கு 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் 250 இடங்கள், 20 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 1950 இடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 250 இடங்கள் உள்ளது. நீட் தேர்வில் அதிகளவில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால், மருத்துவப் படிப்பிற்கான கட்-ஆப் மதிப்பெண்கள் இந்த ஆண்டு அதிகரிக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய்.. மருத்துவர்கள் கூறுவது என்ன? - Liver diseases