புதுச்சேரி:புதுச்சேரி அடுத்த ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் பாதாளச் சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு, அப்பகுதியில் இருந்த வீடுகளில் கழிவறை வாயிலாக வெளியேறி, கழிவறைகளை பயன்படுத்திக் கொண்டிருந்த ஐந்து பேர் விஷவாயுவால் தாக்கப்பட்டனர். பின்னர் அவர்களை மீட்ட உறவினர்கள், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதில், செல்வராணி (15), செந்தாமரை (85) மற்றும் அவரது மகள் காமாட்சி ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், பாலகிருஷ்ணன் (70) மற்றும் பாக்கியலட்சுமி (30) ஆகிய இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 15 வயது சிறுமி செல்வராணியின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை முடிந்து, இறுதிச் சடங்குகளுக்காக அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அங்கிருந்த மாணவி செல்வராணியின் உறவினர்கள் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.