விழுப்புரம்:விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், கட்சியின் 24வது மாநில மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனவரி 3ம் தேதி விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதில், தேசிய செயலாளர் பிரகாஷ்காரத் கலந்து கொள்ள உள்ளார்.
கே.பாலகிருஷ்ணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) தமிழகத்தில் சாதிய மோதல்கள், சாதிய அமைப்புகள் வலுவடைந்து வருவதால் சாதிய சமூக அமைப்புகளுக்கு முடிவு கட்ட சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் போராட முன்வரவேண்டுமென செய்தியை வீடு வீடாக எடுத்து செல்ல வேண்டுமென தீர்மானித்துள்ளோம்.
தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும், மீனவர்களுக்கு மொட்டை அடிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், இலங்கை அரசையும் இலங்கை ராணுவத்தையும் கண்டித்து வரும் 20ம் தேதி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாடத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகிறது. பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே கிடையாது என்கிற மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க :"துணை முதலமைச்சர் குறித்த கேள்வி" - திருமாவளவன் பதில் என்ன? - thirumavalavan about DPCM
ஸ்ரீபெரும்பதூரில் உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள் நாங்கள் வைத்துள்ள சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பாஜக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் சிஐடியு தேவையில்லாமல் போரட்டத்தை தூண்டிவிடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையிலையே அங்கு இருக்கிற மக்களுக்கு தெரியும். ரவுடீசத்தை ஊக்குவிப்பது, தொழிற் சங்க நிர்வாகிகளை மிரட்டி அடி பணிய வைக்கும் செயலை செய்வது பாஜகவினர் தான் என மக்களுக்கு தெரியும்.
நிர்மலா சீதாராமன் கோவையில் பேசியது, மோசமான பேச்சு என்பது அனைவருக்கும் தெரியும். மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் கொள்கை தான். ஆனால் அது உடனே கொண்டு வரமுடியுமா என்பது சிக்கலாக உள்ளது.
மத்திய அரசு மதுவிலக்கு சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டுமென அவர்களே கூறியிருக்கிறார்கள். மது விலக்கு கொண்டு வருவதா, இல்லையா என்பது மாநில அரசின் உரிமைகள். அப்படிப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகமான உரிமை வேண்டுமென கேட்டுகொண்டிருக்கிற இந்த நேரத்தில் இந்தியா முழுவதும் மதுவிலக்கு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தா எப்படி பொருத்தமா இருக்கும் என்பது தெரியவில்லை. இருந்தாலும், மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ள அழைத்திருந்திருக்கிறார்கள் நாங்கள் செல்வோம்.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு விவகாரம் :எல்லா கட்சியின் நோக்கம் என்பது ஆட்சியிலும், அதிகாரத்திலும் வரவேண்டும் என்பது இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொருத்தவரை வேறுபட்டு இருக்கிறது. குறைந்த பட்ச செயல்திட்டத்தில் பங்கேற்பது தான் எங்களது நோக்கம். விசிக ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று சொல்வது தொலைநோக்கு பார்வையில் கூறுகிறார்கள். அது 2026 தேர்தலில் இல்லை" என தெரிவித்தார்.