தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரள தம்பதியின் சதுரங்க வேட்டை.. இரிடியம் மோசடியில் 25 லட்சம் அபேஸ்.. போலீஸ் விசாரணையில் பகீர்! - Iridium Fraud - IRIDIUM FRAUD

Iridium Fraud: வெளிநாட்டிற்கு இரிடியம் ஏற்றுமதி செய்தவதாகக் கூறி ரூபாய் 25 லட்சம் பணம் மோசடி செய்த கேரள தம்பதியை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து இரிடியம், 4 லட்சத்து 99 ஆயிரம் பணம் மற்றும் 77 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இரிடியம், கைதானவர்
இரிடியம், கைதானவர் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 12:06 PM IST

கோயம்புத்தூர்:சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு அவரது நண்பரான கன்னியாகுமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்ட்ரோ வில்சன் என்பவர் மூலம் கோயம்புத்தூர் இடிகரைச் சேர்ந்த சியாம் (எ) ஜாய் மோகன் (வயது 44) என்பவர் அறிமுகமாகி உள்ளார். சியாம் மற்றும் அவரது மனைவியான சஜிதா (38) ஆகியோர் தங்களிடம் விலை மதிப்பற்ற பொருளான இரிடியம் இருப்பதாகவும், அதனை வெளிநாட்டில் விற்றால் கோடிக் கணக்கில் லாபம் பெறலாம் எனக்கூறி சீனிவாசனை நம்ப வைத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இரிடியத்தை சோதனை செய்வதற்காக அறிவியல் நுட்பம் தெரிந்த Y.G. சேகர் என்பவரை சீனிவாசனுக்கு அறிமுகம் செய்து வைத்து, அதனை சோதனை செய்ய சீனிவாசனிடம் இருந்து 10 லட்சம் பெற்றுள்ளனர். சியாம் மூலம் வெளிநாட்டு கம்பெனியில் வேலை செய்வதாக அறிமுகமான வருண்பிரசாத் ரெட்டி, ரவீந்திர பிரசாத், அருண்குமார் மற்றும் ஆனந்த வெங்கடேசன் ஆகியோர்கள் சோதனை செய்யப்பட்ட இரிடியத்தை உண்மையானது என்றும், அதனை வெளிநாட்டில் உள்ள கம்பெனியில் பல கோடி மதிப்பில் விற்றுக் கொடுப்பதாக கூறி அதற்கு முன் பணமாக சீனிவாசனிடம் இருந்து மேலும், 15 லட்சம் பணம் பெற்று உள்ளனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் வராமல் இருக்கவே சந்தேகம் அடைந்த சீனிவாசன் விசாரித்துப் பார்த்ததில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இது தொடர்பாக சீனிவாசன் கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த சியாம் மற்றும் அவரது மனைவி சஜிதா ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து இரிடியம், 4 லட்சத்து 99 ஆயிரம் பணம் மற்றும் 77 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இது போன்ற மோசடிகளை நம்பக்கூடாது என பொதுமக்களுக்கு கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கி உள்ளார்.

join ETV Bharat WhatsApp channel Click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:மிகவும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்கும் மக்கள்.. திருவொற்றியூர் ரயில்வே சுரங்கப்பாதைக்கான தீர்வு எப்போது? - Annamalai nagar railway gate

ABOUT THE AUTHOR

...view details