தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னால் சென்ற டூவீலர் மீது லாரி மோதி கோர விபத்து: நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! - மேட்டூர் விபத்து

salem Accident CCTV: மாமனார் வீட்டிற்கு சென்ற போது கணவன் மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 7:29 PM IST

Updated : Jan 29, 2024, 10:35 PM IST

Salem Accident CCTV

சேலம்:சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் புதூரைச் சேர்ந்த கட்டட தொழிலாளி அழகரசன் (வயது 30), இவரது மனைவி இளமதி (வயது 25). இவர்களுக்கு 5 வயதுமிக்க கிஷோர் என்ற ஆண் குழந்தையும், 2 வயதுமிக்க கிருத்திக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் இன்று (ஜன. 28) கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பண்ணவாடியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது ராமன் நகர் அருகே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டு இருந்த போது பின்னால் வேகமாகவும், ஹாரன் அடிக்காமலும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் லாரியின் சக்கரத்தில் சிக்கியதில் கணவன், மனைவி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதில் குழந்தை கிஷோருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதால், மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த, கருமலை கூடல் போலீசார், கணவன் மனைவி இருவரின் உடல்களை மீட்டு, உடற்கூராய்விற்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாமனார் வீட்டிற்கு சென்ற போது கணவன் மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:கோவையில் பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து.. வெளியான சிசிடிவி காட்சிகள்!

Last Updated : Jan 29, 2024, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details