மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் கூட்டாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு அறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தஞ்சை, நாகை, மயிலாடுதுறையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன். எருக்கூர் நவீன அரிசி ஆலையில் அமைந்துள்ள சைலோவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 130 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 124 நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 34,859 மெட்ரிக் டன்னுக்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 6,444 விவசாயிகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரூ.70.09 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 34.46 மெட்ரிக் டன் அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.8,004 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வரலாற்று சாதனை திட்டம் - ஈபிஎஸ் பெருமிதம்! - athikadavu avinashi plan launched