கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காண்ட்ராக்டர் சக்தி குமார் (45). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சக்தி குமார் சமத்தூரைச் சேர்ந்த கணேசமூர்த்திக்கு ரூ.2,50,000, கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த சாதிக் பாஷாவுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும் மற்றும் ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில்நாதனுக்கு ரூ.8,00,000 பணம் கடனாக கொடுத்ததாக தெரிகிறது.
அப்பணத்தை திருப்பி கேட்டபோது மூவரும் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன விரக்தி அடைந்த சக்தி குமார் தனது சாவிற்கு தன்னிடம் கடன் வாங்கி திருப்பி தராத மூவரும் தான் காரணம் என செல்போனில் வீடியோ பதிவு செய்து அதனை வாட்ஸ் ஆப் மூலம் தனது உறவினர்களுக்கு அனுப்பி விட்டு ராமர் கோயில் வீதியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.