தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் கனமழையால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! - HOGENAKKAL FALLS DHARMAPURI - HOGENAKKAL FALLS DHARMAPURI

Water flow increased in hogenakkal: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

hogenakkal waterfalls photo
ஒகேனக்கல் நீர்விழ்ச்சி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 10:04 AM IST

தருமபுரி: கடந்த 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்தது. மேலும் கடுமையான வெப்ப அலை வீசி வந்ததால், காவிரியில் நீர்வரத்து இன்றி பாறைகளாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்ய தொடங்கியது.

இதனால் காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நான்கு மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 200 கன அடியில் இருந்து 1500 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் மழை குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடி மற்றும் 1500 கன அடி என அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் வறண்டு கிடந்த இடங்களில் தற்போது தண்ணீர் பாய்ந்து ஓடி வருகிறது.

தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகையும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அப்பகுதி வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: யானைகள் வழித்தடத்தில் பூர்வகுடிகளா? தருமபுரி சம்பவத்தில் வனத்துறையின் பதில் என்ன? - DHARMAPURI TRIBAL ISSUE

ABOUT THE AUTHOR

...view details