தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 10:23 PM IST

ETV Bharat / state

"2026 தேர்தலில் பாமகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது" - செல்வப்பெருந்தகை கடும் தாக்கு! - Selvaperunthagai about PMK

Selvaperunthaga: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக நோட்டாவிற்கு கீழ் தான்‌ வாக்கு, டெபாசிட் கூட வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: மயிலாடுதுறை வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர், குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செல்வப்பெருந்தகை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது, “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட சிலவற்றை காப்பியடித்து மத்திய பட்ஜெட்டில் சொல்லியுள்ளனர். பட்ஜெட் என்பது தேசம் முழுமைக்குமானது. பிகாருக்கும், ஆந்திராவுக்கும் மட்டுமான நிதி நிலை அறிக்கை அல்ல. பட்ஜெட்டில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

2004 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி பொற்கால ஆட்சியில், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது குறித்தெல்லாம் சொல்லாமல் தமிழக பாஜக தலைவர் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளை சொல்லி வருவது கண்டிக்கத்தக்கது. ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு வகையில் செலவு செய்துள்ளதாக சிஏஜி அறிக்கை சொல்கிறது. இதற்கெல்லாம் பாஜகவினர் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

’பட்ஜெட்டில் தமிழகம் குறித்து சொல்லியிருக்க வேண்டுமானால் எங்களுக்கு 25 எம்பிக்களை கொடுத்திருக்க வேண்டும்’ என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, “ பிற்போக்குவாதிகள் அப்படித்தான் பேசுவார்கள். 25 எம்பிக்களை கொடுக்காவிட்டால் தமிழகம் புறக்கணிக்கப்படுமா? தமிழக மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே அவர்களுக்கு ஜனநாயக ரீதியாக தண்டணை கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு இடமும் கிடையாது என்றும் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவிற்கு கீழதான்‌ வாக்கு, டெபாசிட் வாங்க முடியாத வகையில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள்” என்றார்.

மின்சார கட்டணம் உயர்வு குறித்த கேள்விக்கு, “ஜெயலலிதா இருக்கும் வரை உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. இத்திட்டத்தால் தமிழக உரிமை பறிக்கப்படும் என்று ஜெயலலிதா அறிக்கையில் சொல்லியுள்ளார். ஜெயலலிதா இறந்த பிறகு உதய் மின்திட்டத்தில் அதிமுக கையெழுத்திட்டதால் தான் தற்போது மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய தமிழக முதல்வரிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். தேர்தல் காலத்தில் பாமாயில், பருப்பு விநியோகம் காலதாமதமானது. மக்கள் மீது தமிழக முதலமைச்சர் சுமையை வைக்கமாட்டார். உண்மையை பேசத் தெரியாதவர்கள் பாஜகவினர்” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மயிலாடுதுறை ஆதிதிராவிடர் நலத்துறை கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில், செல்வப்பெருந்தகை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், மாணவர்கள் தங்கும் விடுதி முறையாக பராமரிக்கப்படாமல், கழிவறை சுத்தம் இல்லாமலும், சமையல் கூடத்தில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் விடுதி காப்பாளர், பொறியாளர் உள்ளிட்ட நால்வரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:விரைவில் திறப்பு விழா காணும் பட்டினப்பாக்கம் நவீன மீன் மார்க்கெட்.. சிறப்பம்சங்கள் என்ன? - pattinapakkam modern fish market

ABOUT THE AUTHOR

...view details