தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசியது ஏன்? - செல்வப்பெருந்தகை வருத்தம்! - SELVAPERUNTHAGAI

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவரை குறித்து பேசாமல், அரசியல் பேசியது வருத்தத்துக்குரியது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை, ஆதவ் அர்ஜுனா
செல்வப்பெருந்தகை, ஆதவ் அர்ஜுனா (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2024, 2:42 PM IST

சென்னை: கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச முடியாது என்றும் அரசியல் குறித்த பேச்சை எல்லாம் தவிர்த்திருக்க வேண்டும் எனவும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசியதற்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78-ஆவது பிறந்த நாள் விழா, சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், இலவச மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட முகாம்களை செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார். மேலும், மாணவ மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.

சோனியா காந்தியால் உருவான சட்டங்கள்:

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வந்த அன்னபூரணி என மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போற்றப்பட்டவர் சோனியா காந்தி.

பல சட்டங்கள் இந்தியாவிற்கு கொண்டு வந்தவர். நீண்ட நெடிய நாட்கள் காங்கிரஸின் தலைவராக இருந்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டம், கட்டாய கல்வி, உணவு பாதுகாப்பு சட்டம் என பல சட்டங்கள் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தவர்,” என்று தெரிவித்தார்.

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா:

தொடர்ந்து அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா குறித்து பேசிய அவர், “அரசியல் யார் வேண்டுமானாலும் பேசலாம், பிறரை புண்படுத்தாமல் பேச வேண்டும். மன்னராட்சி என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மன்னராட்சி என்பது கேள்விக்குறியானது.

இதையும் படிங்க:விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. வெளியான அதிரடி அறிக்கை!

1950 ஜனவரி 26-இல் இந்தியா குடியரசு ஆன பிறகு, மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது. 1971-ஆம் ஆண்டு 26-ஆவது சட்ட திருத்தத்தின் வாயிலாக இந்திரா காந்தி மன்னர் மானிய ஒழிப்பைக் கொண்டு வந்தார். அப்படி இருக்கும்போது எந்த மாநிலத்தில் மன்னராட்சி இருக்கிறது.

எப்போது பேசினாலும் பிற கட்சிகளோ, பிற கட்சியின் தலைவர்களோ, பொதுமக்களோ புண்படாத வகையில் பேச வேண்டும். பேசுவதற்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேச முடியாது. அந்த பேச்சையெல்லாம் அவர்கள் தவிர்த்திருக்க வேண்டும். அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவரைக் குறித்த பெருமைகளைப் பேசாமல் அரசியல் பேசியது வருத்தத்திற்குரியது,” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details