தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விஜய்-க்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் முன்னோடி" - செல்வப்பெருந்தகை கருத்து

விஜய் பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மால் என 4 காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை கையில் எடுத்து அரசியலுக்குள் இறங்கியுள்ளார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

செல்வப் பெருந்தகை, விஜய்
செல்வப் பெருந்தகை, விஜய் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநில தலைவர் மாணிக்கவாசகம் மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் தமிழக பாஜக மாநில செயலாளர் சதீஷ்குமார் உட்பட 25 நபர்கள் இன்று காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், மாநில பொதுச் செயலாளர் எம்.ஏ வாசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப் பெருந்தகை கூறுகையில், “ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்தியா கூட்டணி பலமாக இருக்கிறோம்.

விஜய் மாநாடு புதிய கட்சி ஆரம்பித்துள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். மக்களுக்காக குரல் கொடுக்கலாம், போராட்டங்களையும் முன்னெடுக்கலாம். அதே நேரத்தில் பேச்சுரிமை கருத்துரிமை எல்லாம் இருக்கிறது விமர்சனங்களும் செய்யலாம். விஜய் யார் யாரையெல்லாம் விமர்சித்தாரோ அவர்கள் அதற்கு பதில் அளிப்பார்கள்.

விஜய் காங்கிரஸ் தலைவர்களை கையில் எடுத்துள்ளார்:விஜய் பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கார், அஞ்சலையம்மால் என 4 காங்கிரஸ் முன்னாள் தலைவர்களை முன்னோடியாக எடுத்திருக்கிறார். வேலுநாச்சியாரைப் பற்றி பேசி இருக்கிறார். ஆனால் அவர் எந்த திசையில் பயணிக்க போகிறார் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:"200 தொகுதிகளில் வெல்ல வேண்டும்" - 2026 க்கு டார்கெட் ஃபிக்ஸ் செய்த ஸ்டாலின்.

பாசிச சக்தி பாஜகவாம், ஊழல் தமுகவாம்:விஜய் அரசியல் நேற்றுதான் பிறந்திருக்கிறது ஒரு புதிய குழந்தை, விமர்சனம் அதிகம் செய்ய வேண்டாம். எவ்வாறு அவர் அரசியல் செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். மத்தியரசு பாசிசம் என்கிறார், திமுகவை ஊழல் என்கிறார்.

காங்கிரஷில் இணையும் பாஜகவினர் (Credits- ETV Bharat Tamil Nadu)

விஜய்க்கு திமுக உரிய வகையில் பதில் அளிக்கும்:புதிதாக யார் கட்சி ஆரம்பித்தாலும் ஆட்சியில் உள்ளவர்களை விமர்சிக்காமல் கொள்கை கோட்பாடுகளை பற்றிப் பேச முடியாது.அவரது விமர்சனத்திற்கு திராவிட முன்னேற்ற கழகம் உரிய வகையில் பதில் அளிப்பார்கள். விஜய் போன்று பிரபலமுள்ள ஒருவர் கட்சி ஆரம்பித்தால் ஆட்சிக்கு எதிராக உள்ள வாக்குகளை இதரணிக்கு போகவிடாமல் மடைமாற்றம் செய்வதற்கு தான் அது உதவும்.

அதிமுக ஓட்டு தற்போது விஜய்க்கு:திமுக மீது எதிர்நிலை உள்ளவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வாய்ப்பிருந்தது. அந்த எதிர்ப்பு ஓட்டுகள் தற்போது விஜய்க்குச் செல்ல வாய்ப்புள்ளது. மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள்ளோ அதுதான் இறுதித் தீர்ப்பாக இருக்கும்.

பாஜக வித்தியாசமான கட்சி:பாஜகவைத் தவிர அனைவரும் சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு என்ற ஒரே கொள்கையைத்தான் பேசுவார்கள். அதைத்தான் விஜயும் பேசி உள்ளார். பாஜக மட்டும் தான் இந்த தேசத்தில் வித்தியாசமான கட்சி. காங்கிரஸ் பேரியக்கம் எல்லா அதிகாரத்தையும் பார்த்த கட்சி. மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் சுவைக்காத அதிகாரம் கிடையாது. அதிகாரத்தை தள்ளி வைத்துவிட்டு மக்களுக்கு சேவை செய்வதுதான் காங்கிரஸ் பேரியக்கம். தமிழகத்தில் அதிகார பகிர்வு தொடர்பாக தேசியத் தலைமை தான் முடிவு செய்யும்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details