சென்னை:திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் முருகன்(50). இவர் தனியார் பேருந்து நடத்துநராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்தில் முருகன் பணியில் இருந்தார். அவருடன் சகாதேவன்(49) என்பவர் ஓட்டுநராக பணியில் இருந்துள்ளார்.
பூந்தமல்லியில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து காஞ்சிபுரம் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்த போது பேருந்தின் படிக்கட்டில் நடத்துநர் முருகன் நின்று கொண்டு இருந்துள்ளார். சரியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை திருமழிசை கூட்டு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது,
ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதில் படிக்கட்டில் நின்று கொண்டு இருந்த நடத்துநர் முருகன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.