சென்னை: தமிழக அரசு சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை (மார்ச் 6) மாலை 6.00 மணிக்கு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை (டி.என். ராஜரத்தினம் கலையரங்கில்) நடைபெற உள்ளது.
இந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவிற்காக 2015-ஆம் ஆண்டிற்குத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரங்கள் அடங்கிய பட்டியலும் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
விருது வழங்க தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள்:
1 | சிறந்த படம் முதல் பரிசு | தனி ஒருவன் |
---|---|---|
2 | சிறந்த படம் இரண்டாம் பரிசு | பசங்க 2 |
3 | சிறந்த படம் மூன்றாம் பரிசு | பிரபா |
4 | சிறந்த படம் சிறப்புப் பரிசு | இறுதிச்சுற்று |
5 | பெண்களை பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு) | 36 வயதினிலே |
சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்:
1 | சிறந்த நடிகர் | ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று) |
---|---|---|
2 | சிறந்த நடிகை | ஜோதிகா (36 வயதினிலே) |
3 | சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு | கௌதம் கார்த்திக் (வை ராஜாவை) |
4 | சிறந்த நடிகை சிறப்புப் பரிசு | ரித்திகா சிங் (இறுதிச்சுற்று) |
5 | சிறந்த வில்லன் நடிகர் | அரவிந்த்சாமி (தனி ஒருவன்) |
6 | சிறந்த நகைச்சுவை நடிகர் | சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு) |
7 | சிறந்த நகைச்சுவை நடிகை | தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/36 வயதினிலே) |
8 | சிறந்த குணச்சித்திர நடிகர் | தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்) |
9 | சிறந்த குணச்சித்தர நடிகை | கவுதமி (பாபநாசம்) |
10 | சிறந்த இயக்குநர் | சுதா கொங்காரா (இறுதிச்சுற்று) |
11 | சிறந்த கதையாசிரியர் | மோகன் ராஜா (தனி ஒருவன்) |
12 | சிறந்த உரையாடலாசிரியர் | இரா.சரவணன் (கத்துக்குட்டி) |
13 | சிறந்த இசையமைப்பாளர் | ஜிப்ரான் (உத்தம வில்லன்/பாபநாசம்) |
14 | சிறந்த பாடலாசிரியர் | விவேக் (36 வயதினிலே) |
15 | சிறந்த பின்னணிப் பாடகர் | கானா பாலா (வை ராஜா வை) |
16 | சிறந்த பின்னணிப் பாடகி | கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே) |
17 | சிறந்த ஒளிப்பதிவாளர் | ராம்ஜி (தனி ஒருவன்) |
18 | சிறந்த ஒலிப்பதிவாளர் | ஏ.எல்.துக்காரம் |