தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யானை மிதித்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு..விடுமுறையில் நேர்ந்த சோகம்! - Elephant Attack - ELEPHANT ATTACK

Elephant Attack: கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் யானை மிதித்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த கல்லூரி மாணவர் முகேஷ்
உயிரிழந்த கல்லூரி மாணவர் முகேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 1:43 PM IST

கோயம்புத்தூர்: வால்பாறை அடுத்த சேக்கல்முடி புதுக்காடு பகுதியில் கல்லூரி மாணவர் யானை மிதித்து உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து வால்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறை சேக்கல் முடி புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் - முனியம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் முகேஷ்(18). இவர், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில், முதலாம் ஆண்டு படித்து வந்தார். செமஸ்டர் தேர்வு முடிந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, தனது நண்பருடன் இணைந்து இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுள்ளார்.

இந்நிலையில், கல்யாண பந்தல் பிரிவிலிருந்து புதுக்காடு எஸ்டேட்டிற்கு செல்லும் தனியார் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக காட்டிற்குள் இருந்து வெளியே வந்த காட்டு யானை, நேருக்கு நேர் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இதில், முகேஷ் கால் தடுமாறி கீழே விழுந்ததால், யானை அவரை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். சந்திரபோஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து, சந்திரபோஸ் அவரது உறவினர்கள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மானாம்பள்ளி வனத்துறையினர், முகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரி (PCCF) ராகேஷ் குமார். டோக்ரா (principal chief conservator forest) DFO பார்கவி தேஜா, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகர்கள் வெங்கடேஷ், மணிகண்டன் ஆகியோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று முகேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரியில் இருந்து தேர்வு முடிந்து விடுமுறைக்கு வீடு திரும்பிய முதக் நாளிலே யானை மிதித்து அவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இளையராஜா பிறந்தநாள்... 1000 படங்களின் பெயர்களை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தல்! - Ilaiyaraaja Birthday Art

ABOUT THE AUTHOR

...view details