தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் தினத்தையொட்டி, பெண் போலீசாருக்கு விடுமுறை..! - கோவை மாநகர காவல் ஆணையர் தகவல் - சர்வதேச மகளிர் தினம்

Coimbatore Police Women's Day Celebration:மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் போலீசாருக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அடுத்து வரக்கூடிய தேர்தல் பணிக்காக புத்துணர்ச்சியுடன் வரவேண்டும் எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Coimbatore police Department celebrated International Womens Day
கோவையில் மகளிர் தின கொண்டாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 8:49 AM IST

கோவையில் மகளிர் தின கொண்டாட்டம்

கோயம்புத்தூர்:'மகளிர் தினம் என்பது தற்போது மகளிர் வாரம் என ஆகிவிட்டதாகவும், மனம் விட்டு சிரிக்க வைக்கும் வாய்ப்பே மகளிர் தினம் எனவும், இதனைக் கொண்டாட பெண் போலீசாருக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிப்பதாகவும் மகளிர் தின விழாவில் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விடுமுறைக்குப் பின்னர் புத்துணர்ச்சியுடன் தேர்தல் பணிக்கு காவலர்கள் வருமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை ஆயுதப்படை மைதானத்தில் உலக மகளிர் தினம் (International Women's Day) கோவை மாநகர காவல்துறை சார்பில் நேற்று (மார்ச் 9) கொண்டாடபட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், மாநகர காவல் தலைமையக துணை ஆணையர் சுகாசினி, துணை ஆணையர் சரவணன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

'மகளிர் தின திருவிழா' என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பெண் போலீசார்களும் கலந்து கொண்டனர். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நடன நிகழ்ச்சி, விளையாட்டுப் போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன.

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற பெண் போலீசார்களுக்கு காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பரிசுகளை வழங்கி சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியில் பெண் போலீசார் அனைவரும் சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனம் ஆடி அசத்தினர்.

இந்த விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, 'மகளிர் தினம் என்பது தற்போது மகளிர் வாரம் என ஆகிவிட்டது. பெண் காவலர்கள் அனைவரும் வருடம் முழுவதும் கடின உழைப்பைத் தருகிறீர்கள்.

அவர்களுக்கு வருடத்தில் என்றைக்காவது ஒரு நாள் மகிழ்ச்சியாகவும், மனம் விட்டு சிரிக்கவும் ஒரு வாய்ப்பு தேவை அதனை, 'மகளிர் தினம்' என்ற பெயரில் நாம் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது மட்டுமல்ல, காவலர்களின் குடும்பங்களுக்காகப் பொங்கல், தீபாவளி மற்றும் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைக் கடந்தாண்டு நடத்தியுள்ளோம்.

அடுத்த 2 மாதங்கள் தேர்தல் பணிகள் இருக்கும் என்பது இதுபோன்ற எந்த நிகழ்ச்சியும் நடத்த இயலாது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணையின்படி, வாரம் ஒரு முறை ஓய்வு அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சில நேரங்களில் வேலை காரணமாக ஓய்வு எடுக்கவிட்டாலும் அதனை வரக்கூடிய வாரங்களில் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை (அதாவது இன்று) விடுமுறை அளிக்கப்படுகிறது. விடுமுறை தினம் முடிந்து வரும்போது தேர்தல் பணிகளை மேற்கொள்ளப் புத்துணர்ச்சியுடன் காவலர்கள் பணிக்கு வரவேண்டும். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முடிவில்லா மனித-விலங்கு மோதல்.. தீர்வு என்ன?

ABOUT THE AUTHOR

...view details