தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வந்தேறி என்கிறார்'.. கோவை வடக்கு மாவட்ட நாதக நிர்வாகிகள் கூட்டாக வெளியேறினர்.. பரபரப்பு பேட்டி..! - NTK FUNCTIONARIES LEFT

கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 20 பேர் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். சீமானின் முரணான பேச்சுளால் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நாதக நிர்வாகிகள், சீமான் கோப்புப்படம்
முன்னாள் நாதக நிர்வாகிகள், சீமான் கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu, Seeman X page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 4:23 PM IST

கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளதாக கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் 20 பேர் இன்று அறிவித்துள்ளனர். அந்த வகையில், கட்சியில் இருந்து வெளியேறியுள்ள வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மகளிரணி செயலாளர் அபிராமி, வடக்கு மாவட்ட வணிகர் பாசறை செயலாளர் செந்தில்குமார், வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஏழுமலை பாபு ஆகியோர் கோவையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, கட்சியை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை கூறிய அவர்கள்; நாம் தமிழர் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் 20 பேர் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் முரணான பேச்சுளால் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம். சீமானின் செயல்பாடுகள் கொள்கை ரீதியாக இல்லை. கொங்கு மண்டலத்தில் அருந்ததியர்களை வந்தேறி என்கிறார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.

மேலும், சீமானின் செயல்பாடுகள் கொள்கைக்கும், நடைமுறைக்கும் மாற்றாக இருக்கின்றது. கொங்கு மண்டலத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரை தொடர்பு கொள்வது என்பதே தெரியவில்லை. எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்ய வில்லை என தெரிவித்த அவர்கள், தென் மாவட்டத்தில் இரு சமூகங்களுடக்கிடையே பிளவுபடுத்தும் வகையில் சீமான் பேசி வருவதாக கூறினர்.

இதையும் படிங்க:கொரோனா எதிரொலி; விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயை அறிந்துக் கொள்ள புதிய மையம் - தமிழக அரசு

அத்துடன், நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கிய பயணமாக இல்லை என தெரிவித்த அவர்கள், சீமானை விட விஜய் பெரிய ஆள் கிடையாது எனவும், அவர் பின்னால் செல்ல வேண்டிய தேவை இல்லை என்றும் கூறினர்.

தொடர்ந்து அவர்கள், சீமானின் பேச்சு மற்றும் கருத்தியலை பார்த்து கட்சிக்கு வந்தோம். ஆனால், அவரது செயல்பாடு அப்படி இல்லை; இரு வருடங்களாக தலைமையிடம் அதிருப்தியில் இருப்பதாக சொல்லி கொண்டே வந்தோம். ஆனால், ''நான் எடுப்பது தான் முடிவு, இருந்தால் இருங்கள் இல்லா விட்டால் போங்கள்'' என சீமான் சொல்கிறார்.

சீமான் சமீபத்தில் ரஜினியை சந்தித்தது, அவரது தனிப்பட்ட செயலாக இருக்கும். நாம் தமிழர் கட்சியில் பாதிக்கு பாதி பெண்களுக்கு உரிமை கொடுக்கப்படுகிறது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இரு வருடங்களாக கட்சி நிர்வாகிகளின் கருத்தை கேட்பதில்லை, தமிழகம் முழுவதும் கட்சியில் தலைமை மீது அதிருப்தியில் இருக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் மாற்று மொழி பேசுபவர்கள் அதிகம் இருக்கின்றனர். இங்கு அதை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை. ராஜிவ் காந்தி, கல்யாண சுந்தரம் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் இருந்த போது குறைகளை தீர்க்க முயன்றார்கள். இப்போது நாம் தமிழர் கட்சியில் அதுபோல யாரும் இல்லை. தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதால் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர்'' என இவ்வாறு தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details