கோயம்புத்தூர்:வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்ட உத்தரவாதம், பயிா் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது, விவசாயிகளை ஹிரியானா அரசு எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது.
மேலும், பஞ்சாபின் கனெளரி எல்லையிலிருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கியபோது, அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா் புகை குண்டுகளை வீசி கலைத்து வந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில், 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தாா்.
அதனைத் தொடர்ந்து, விவசாயி சுப்கரன் சிங் மரணத்துக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மரியாதை செலுத்தும் விதமாகவும் கிசான் மஜ்தூர் மோர்ச்சா அமைப்பின் சார்பில், சுப்ரகன் சிங்கின் அஸ்தி கலசம் நாடு முழுவதும் யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது.