தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மக்களுக்கு ஒரு எச்சரிக்கை.. நண்பகல் 12 - 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்! - Coimbatore Heatwave status - COIMBATORE HEATWAVE STATUS

Summer heat increased: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தி உள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுரை
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 3:56 PM IST

கோயம்புத்தூர்:தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூரில் வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்துக் காணப்படும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தனது ஏப்.23 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் வட உள் மாவட்டமான கோயம்புத்தூர் மாவட்டத்தில், வரும் நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்த்திடுமாறும், வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க எளிமையான டிப்ஸ்! - Summer Safety Tips

ABOUT THE AUTHOR

...view details