தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக நிா்வாகியை அலுவலகம் புகுந்த வெட்டிய கும்பல்..இந்து மக்கள் கட்சி முன்னாள் நிர்வாகியிடம் தீவிர விசாரணை! - BJP CADRE BRUTALLY ATTACKED - BJP CADRE BRUTALLY ATTACKED

கோவை ஆர்.எஸ்.புரம் பாஜக மண்டல இளைஞரணிச் செயலாளர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாஜக நிர்வாகி சதீஷ்குமார்
பாஜக நிர்வாகி சதீஷ்குமார் (Image Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 12:30 PM IST

கோயம்புத்தூர்:கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். இவருக்கும் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான எரியீட்டி வேலு என்பவரின் மகன்களுக்கும் இடையே, இடம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அப்போது சதீஷ்குமார் அவ்விருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ஆர்.எஸ் புரம் லைட் ஹவுஸ் பகுதியிலுள்ள சதீஷ்குமார் அலுவலகத்திற்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல், சதீஷ்குமாரை தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதில் இரண்டு கைகளும் துண்டான நிலையில் உயிருக்கு போராடிய சதீஷ்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஆர்.எஸ் புரம் காவல் நிலைய போலீசார், தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சந்தேகத்திற்கிடமான சகோதரர்களின் தந்தையான எரியீட்டி வேலுவை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ள அவரது மகன்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கும்பகோணத்தில் பழமையான காண்டாமிருக கொம்பினை விற்க முயற்சி.. 5 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details