தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சொட்டு சொட்டாய் ஊறும் கிணற்றுத் தண்ணீர்.. குடங்களோடு காத்திருக்கும் வத்தல்மலை மக்கள்! - Effects of summer heat - EFFECTS OF SUMMER HEAT

Water Shortage Issue In Vathalmalai Village: தருமபுரி மாவட்டம், வத்தல்மலை கிராமத்தில் உள்ள பெரியூர் கிராமத்தில் கோடை வெயிலின் காரணமாக, தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும், சாகுபடி செய்துள்ள காபி மற்றும் மிளகு செடிகள் கருகிவிட்டதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Water Shortage Issue In Vathalmalai Village
Water Shortage Issue In Vathalmalai Village

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 9:26 PM IST

Updated : Apr 25, 2024, 2:49 PM IST

வத்தல்மலை தண்ணீர் தட்டுப்பாடு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வத்தல்மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சின்னங்காடு, ஒன்றியம்காடு, பால்சிலம்பு, பெரியூர் மற்றும் நாயக்கனூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் அமைந்துள்ளன.

இதில், பெரியூர் கிராமத்திற்கு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சுமார் 10 முதல் 20 அடி ஆழமே உள்ள ஊர் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீரைத்தான், சுற்றுவட்டாரத்தில் உள்ள 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வசிக்கும் மக்கள் குடிப்பதற்கும், சமையலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போதைய நவீன காலத்தில் எத்தனையோ வளர்ச்சிகள் வந்தாலும்கூட, கிணற்றில் மின் மோட்டார் பயன்படுத்தினால், 10 முதல் 20 அடி ஆழமே உள்ள இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீர் வறண்டு விடும் என்பதால், வாளி மூலம் மட்டுமே தண்ணீரை இறைத்து பயன்படுத்தி வருகின்றனர் இந்த கிராம மக்கள்.

இந்த நிலையில், தற்போது கோடை வெயிலின் காரணமாக கடும் வறட்சி நிலவி வருவதால், கிணற்றில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே ஊறி வருகிறது. ஆகவே, அதிகாலை 3 மணி முதலே கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்கும் பணியில் இங்குள்ள கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிளகு மற்றும் காபி சாகுபடி செய்து வருகின்றனர். மிளகு மற்றும் காபிச் செடியை பொறுத்தவரையில், மழைப்பொழிவு ஏற்படும் நேரங்களிலும் மற்றும் பனிப்பொழிவு நேரங்களிலும் குளுமையான காற்றில் கிடைக்கும் ஈரப்பதத்தால் வளரக்கூடிய தாவரங்கள்.

ஆனால், தற்பொழுது பருவநிலை மாறுபாடு காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், தருமபுரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், மிளகு மற்றும் காபி செடிகள் காய்ந்து கருகிவிட்டது. இதன் காரணமாக, விவசாயிகளுக்கு கடும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த மதிவாணன் கூறுகையில், "பெரியூர் கிராமத்தில் உள்ள 10 முதல் 20 அடி ஆழமே உள்ள இந்தக் கிணற்றை மேலும் ஆழப்படுத்தினால். கூடுதலாக தண்ணீர் கிடைக்கும். தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் கிணற்றை ஆழப்படுத்தி எங்கள் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மேலும், எங்கள் கிராமத்தில் சாகுபடி செய்துள்ள காபி மற்றும் மிளகு செடிகள் நடவு செய்ததில் இருந்து பலன் தர மூன்று ஆண்டுகள் ஆகும். தற்பொழுது கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், மிளகு மற்றும் காபி செடிகள் கருகிவிட்டது. இதனால், விவசாயிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று வேதனையோடு தங்கள் பகுதியில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தி, தங்கள் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க:"வெப்ப அலை வீசும்; தமிழக மக்கள் ஜாக்கிரதை" - வானிலை ஆய்வு மையம் விடுத்த வார்னிங்!

Last Updated : Apr 25, 2024, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details