தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் - minister Saminathan - MINISTER SAMINATHAN

minister Saminathan: தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 12:20 PM IST

ஈரோடு:பவானிசாகர் அணை கட்ட காரணமாக இருந்த சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஈஸ்வரனுக்கு, பவானிசாகரில் திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் கட்டப்படும் என கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதைத்தொடர்ந்து தியாகி ஈஸ்வரனுக்கு வெண்கல சிலையுடன் கூடிய அரங்கத்தில் திருமண மண்டபம், வரவேற்பு அறை, மணமகன் மற்றும் மணமகள் அறை, சமையல் அறை, பொருட்கள் சேமிப்பு அறை மற்றும் உணவு உண்ணும் இடம் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிவறைகள், ஆழ்துளைக் கிணறு, கீழ்நிலை தொட்டி, மேல்நிலைத் தொட்டியுடன் கூடிய குடிநீர் வசதி மற்றும் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய அரங்கம் கட்டுமான பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் தியாகி ஈஸ்வரனின் அரங்கம் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மண்டபத்தில் செய்யப்பட்ட வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "பவானிசாகர் அணை அமைவதற்கு காரணமாக இருந்த ஈரோடு சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ சுதந்திரப் போராட்ட தியாகி எம்.ஏ.ஈஸ்வரனுடைய பணியை பாராட்டுகின்ற வகையில் அவருக்கு சிலையும்,நினைவகமும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இந்த அரங்கம் அமைய முதல்வர் உத்தரவிட்டார்.

ரூ.3 கோடியே 4 லட்சம் மதிப்பில் அரங்கம் அமையப்பெற்று இருக்கிறது. திருவுருவ சிலையும் நிறுவப்பட உள்ளது. இந்த அரங்கம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க இருக்கிறது. அணை அமைந்துள்ள பகுதியிலேயே இந்த அரங்கம் அமைந்துள்ளது சாலப் பொருத்தமாக உள்ளது.

மணிமண்டபம் என்பதற்கு பதிலாகத் தான் அரங்கமாக அமைக்கப்பட்டது. உதாரணமாக சென்னையில் கலைவாணர் அரங்கம் போல் பொதுக் காரியங்களுக்கும் அரசால் வாடகைக்கு விடப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

மணிமண்டபம் கட்டி பயன்படுத்தினால் தலைவரின் பிறந்தநாளுக்கு மட்டுமே திறக்கப்படும். ஆண்டு முழுவதும் அது பயனற்று கிடக்கிறது. இதனால் தான் முதலமைச்சர் அரங்கமாக அமைக்க உத்தரவிட்டார்கள். கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என உத்தரவு உள்ளது.

தமிழ்நாட்டில் தமிழுக்கு பெயர்ப் பலகை வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள செய்தியாளர் அங்கீகார அட்டை விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. உரிய நேரத்தில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளதே, அதே போல் தமிழகத்திலும், தமிழர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பு முன்னுரிமை அளிக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழக முதலமைச்சர் இது குறித்து முடிவு செய்வார் என கூறினார்.

இதையும் படிங்க:சிறந்த யூடியூபர் ஆகனுமா? அப்ப இதை கடைபிடிச்சா மட்டும் போதும்!

ABOUT THE AUTHOR

...view details