தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் (33). இவருடைய மனைவி சந்தியா (33). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரவீனும் அவருடைய மனைவி சந்தியாவும் பெங்களூருவில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில், சந்தியா இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்தார். இதனால் பிரசவத்திற்காக சந்தியாவும் அவரது கணவர் பிரவீனும் பட்டுக்கோட்டையில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று சந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதில் பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. மேலும், சந்தியாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது.