சென்னை: சேப்பாக்கத்தில் ரூ.5 கோடி செலவில் தரம் உயரத்தப்பட்ட மாநில அவசர கால பேரிடர் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சரிடம், அமெரிக்க பயணம், முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளிட்டவை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
பின்னர், அமைச்சரவை மாற்றப்படவுள்ளதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "எனக்கு எந்த தகவலும் வரவில்லை" என பதிலளித்துள்ளார்.